இந்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் காலியாக உள்ள வல்லுநர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 05 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.42 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்பத் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடக்ளுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : கனரா வங்கி
மேலாண்மை : மத்திய அரசு
பணி : வல்லுநர்
மொத்த காலிப் பணியிடம் : 05
தகுதி:-
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் MCA (Master of Computer Application), B.E, B.Tech, M.E, M.Tech துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 20 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.23700 - 980/7 - 30560 - 1145/2 - 32850 - 1310/7 - 42020
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.canarabank.com/ என்ற இணையதளம் மூலம் 15.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 15.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : ஆன்லைன் எழுதப்பட்ட சோதனை, ஜி.டி மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.canarabank.com/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












