மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலையில் (HIL) காலியாக உள்ள Assistant Marketing Manager மற்றும் அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.46 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலை (HIL)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 03
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:
- Assistant Marketing Manager (E-2 cadre) - 01
- Officer (Seed Production) (E-1 cadre) - 02
கல்வித் தகுதி :
Assistant Marketing Manager - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் B.Sc. (Agriculture) அல்லது Science Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Officer (Seed Production) - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் B.Sc.(Agriculture) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 32 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் :
- Assistant Marketing Manager (E-2 cadre) - ரூ.46,500
- Officer (Seed Production) (E-1 cadre) - ரூ.40,500
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 10.02.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.hil.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும்.


Click it and Unblock the Notifications












