மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலையில் (HIL) காலியாக அதிகாரி மற்றும் சட்ட அதிகாரி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.40 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலை (HIL)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 02
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:
- Officer - 01
- Law Officer - 01
கல்வித் தகுதி :
Officer (Rajbhasha) - இந்தி, ஆங்கிலம் பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 4 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Law Officer - சட்டத் துறையில் பட்டம் தேர்ச்சி பெற்று 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : மேற்கண்ட பணியிடங்களுக்கு 32 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.16,400 முதல் ரூ.40,500 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.hil.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : அறிவிப்பு வெளியிடப்பட்டு 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.590
- எஸ்.சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் இல்லை.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.hil.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும்.


Click it and Unblock the Notifications












