ஜிஐசி இன்சூரன்ஸ் நிறுத்தில் உதவி மேலாளராக ஆசையா...!!

மத்திய அரசின் கீழ் செயல்படும் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் (ஜிஐசி) காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு gicre.in என்ற இணையதள முகவரி லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.

ஜிஐசி என சுருக்கமாக அழைக்கப்படும் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஒரு இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமாகும், இது மும்பையில் அதன் பதிவு அலுவலகம் மற்றும் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. இது 22 நவம்பர் 1972 ல் நிறுவனங்கள் சட்டம், 1956 இன் கீழ் இணைக்கப்பட்டது. ஜெர்மனி, சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நிறுவனங்கள் உட்பட 2016 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வெளிநாட்டு மறுகாப்பீட்டு நிறுவனங்களுக்கு காப்பீட்டு சந்தை திறக்கப்படும் வரை இந்திய காப்பீட்டு சந்தையில் ஒரே தேசியமயமாக்கப்பட்ட மறுகாப்பீட்டு நிறுவனமாக இது இருந்தது.
இந்த பெருமைமிகு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில்தான் (ஜிஐசி) தற்போது உதவி மேலாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஜிஐசி இன்சூரன்ஸ் நிறுத்தில் உதவி மேலாளராக ஆசையா...!!

ஜிஐசி நிறுவனத்தில் தற்போது அசிஸ்டென்ட் மானேஜர் பிரிவில் புள்ளியியல் 6, பொது 16, சட்டம் 7, எச்.ஆர்.,6, ஐ.டி., 9, இன்சூரன்ஸ் 17, பொருளியல் 2, மருத்துவம் 2 உட்பட மொத்தம் 85 இடங்கள் காலியாக உள்ளன.

அசிஸ்டென்ட் மானேஜர் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி:

பல்வேறு பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளதால் பிரிவு வாரியாக கல்வித்தகுதி மாறுபடும். எனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இதைக் காண முடியும். gicre.in என்ற இணையதள முகவரியில் இதைப் பார்க்கலாம்.

அசிஸ்டென்ட் மானேஜர் பணியிடங்களுக்கான வயதுத்தகுதி: 1.10.2023 அடிப்படையில் 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
அசிஸ்டென்ட் மானேஜர் பணியிடங்களுக்கான தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு மூலம் ஆட்கள் இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்:

அசிஸ்டென்ட் மானேஜர் பணியிடங்களுக்கான சென்னை, கோவை, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

அசிஸ்டென்ட் மானேஜர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக்கட்டணம்:

அசிஸ்டென்ட் மானேஜர் பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 1000 செலுத்தவேண்டும். பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் தேவை இல்லை.

கடைசிநாள்:

அசிஸ்டென்ட் மானேஜர் பணியிடங்களுக்கு வரும் ஜனவரி 12-ம் தேதிக்குள் (12.1.2024) விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

இணையதள முகவரி:

கூடுதல் விவரங்களுக்கு gicre.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
General Insurance Corporation Of India has published an official notification for GIC Assistant Manager Recruitment 2023 for 85 vacancies on the official website i.e. www.gicre.in. Through this recruitment process, GIC is filling up graduate/postgraduate candidates for the position of Officer in the cadre of Assistant Manager (Scale-I) to be posted in Head Office, Mumbai. GIC is inviting online applications from 23 December 2023 to 12 January 2024. Candidates can check more details below regarding the GIC Assistant Manager Recruitment 2023.GIC, recruit, Assistant Manager, posts,
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+