மத்திய அரசிற்கு உட்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான கெயில் (GAIL) நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாகப் பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 25 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.80 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : கெயில் (GAIL)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 25
பணி : நிர்வாகப் பயிற்சியாளர்
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 26 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.60,000 முதல் ரூ. 1,80,000 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.gailonline.com என்னும் இணையதளத்தின் மூலம் 16.03.2021ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
நேரடியாக விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.
தேர்வு முறை : GATE-2021 தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 16.03.2021
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://gailonline.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












