கெயில் இந்தியா (Gail India) புல் டைம் ஷிப்ட் டூட்டி மெடிக்கல் ஆபீஸர் (Full Time Shift Duty Medical Officer -SDMO) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள டாக்டர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். இப்பணிில் சேரும் தகுதியான நபர்களுக்கு ரூ.93,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
கெயில் இந்தியா)நிறுவனம் (GAIL India Limited, டெல்லியைத் தலைமையகமாகக் கொண்டு இயற்கை எரிவாயுவை முறைப்படுத்தி பரவலாக வழங்கும் மிகப்பெரிய அரசுத்துறை நிறுவனமாகும். இதன் முதன்மையான ஆறு பிரிவுகளாக இயற்கை எரிவாயுவையும் நீர்ம நிலை பெட்ரோலிய வாயுவை யும்(LPG) எடுத்துச் செல்லும் சேவைகள், இயற்கை எரிவாயு வணிகம், பெட்ரோகெமிக்கல்ஸ், எல்பிஜியும் நீர்ம ஐதரோகார்பன்களும், கெயில்டெல் உள்ளன.

1984-ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் இயற்கை எரிவாயு கட்டுமான மேம்பாட்டுக்காக இந்திய அரசால் நிறுவப்பட்டது. தொடக்கத்தில் இந்த நிறுவனம் கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா என அழைக்கப்பட்டது. பின்னர் இதன் ஆங்கிலச் சொற்களின் முதல் எழுத்துக்களை கொண்டு கெயில் (GAIL) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மகாரத்னா மதிப்பைப் பெற்ற மிகப் பெரிய நிறுவனமாக இது உள்ளது.
இந்த பெருமைமிகு நிறுவனத்தில் புல் டைம் ஷிப்ட் டூட்டி மெடிக்கல் ஆபீஸர் பணியிடங்களில் ஒன்று மட்டுமே காலியாக உள்ளது. இந்தப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் டிசம்பர் 21-ம் தேதி (21.12.2023) ஆகும்.ஆப்-லைன், ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.இந்த புல் டைம் ஷிப்ட் டூட்டி மெடிக்கல் ஆபீஸர் (Full Time Shift Duty Medical Officer) பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் MBBS தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன.
இந்த கெயில் இந்தியா நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கில் காணலாம்.இந்த லிங்க்கைத் தொடர்புகொண்டால்https://gailonline.com/careers/currentOpnning/Detailedadvertisement04122023.pdf போதிய விவரங்களை அறியலாம்.
இந்த கெயில் இந்தியா(Gail India) நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மற்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 21.12.2023 (டிசம்பர் 21) தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு https://gailonline.com/careers/currentOpnning/Detailedadvertisement04122023.pdf என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












