மத்திய கிழக்கு ரயில்வேயில் (ECR) கிளாசிக்கல் டான்சர், தபேலா வித்வான்கள் (Classical Dancer, Tabala Player) ஆகிய பணிகளுக்கென கல்ச்சுரல் கோட்டாவின் (Cultural Quota) பிரிவின் கீழ் காலியாக உள்ள இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.கூடுதல் விவரங்களுக்கு https://ecr.indianrailways.gov.in/cris//uploads/files/1703481297752-null.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
கிழக்கு மத்திய ரயிலவே மண்டலம், இந்திய ரயில்வேயின் 17 மண்டலங்களுள் ஒன்றாகும்.
இதன் தலைமையகம் ஹாஜிப்பூரில் உள்ளது, மேலும் இந்த மண்டலம் சோன்பூர், சமஸ்திபூர், தானாபூர், முகல்சராய், மற்றும் தன்பாத் ஆகிய கோட்டங்களை உள்ளடக்கியது.
இந்த மண்டலம் 1996 செப்டம்பர் 8 உருவாக்கப்பட்டது. இதன் தற்போதைய தலைவர் ஏ. கே. மிட்டல் ஆவார்.
கிழக்கு ரயில்வேயின் தன்பாத், டானாபூர், முகல்சராய் மற்றும் வடகிழக்கு இரயில்வேயின் சோனேபூர் மற்றும் சமஸ்திபூர். அதன் இருப்பு கடந்த 13 வருடங்கள் சவால்கள் நிறைந்ததாக இருந்ததுடன், தொழிலாளர் மற்றும் உள்கட்டமைப்பின் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், ஒவ்வொரு தடையும் அர்ப்பணிப்புடன் கையாளப்பட்டது.

ECR, பீகார், ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய 5402.693 டிராக் கிலோமீட்டர்கள் மற்றும் 3707.988 பாதை கிலோமீட்டர்கள் கொண்ட பரந்த நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது. 3707.988 வழித்தடத்தில் 1572.202 கிமீ மின்மயமாக்கப்பட்டுள்ளது.
ECR ஆனது அதன் பரப்பளவில் மக்களுக்கு உயிர்நாடியாக இருந்து வருகிறது மற்றும் அப்பகுதியின் விரைவான வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தப் பெருமை வாய்ந்த மத்திய கிழக்கு ரயில்வே மண்டலத்தில் தான் (ECR) தற்போது கிளாசிக்கல் டான்சர், தபேலா வித்வான்கள் (Classical Dancer, Tabala Player) ஆகிய பணிகளுக்கென கல்ச்சுரல் கோட்டாவின் (Cultural Quota) பிரிவின் கீழ் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கான கல்வி தகுதி:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் 10ம் வகுப்பு + ITI, 12ம் வகுப்பு, Diploma, Graduate Degree, Post Graduate Degree தேர்ச்சி பெற்றவராக இருத்தல் அவசியம்.
வயது வரம்பு:
கிளாசிக்கல் டான்சர், தபேலா வித்வான்கள் (Classical Dancer, Tabala Player) ஆகிய பணிகளுக்கென பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 1.1.2024 அன்றைய நாளின் படி, 18 வயது முதல் 30 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
SC / ST - 05 ஆண்டுகள், OBC - 03 ஆண்டுகள், PWBD - 10 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன.
மாத சம்பளம்:
கிளாசிக்கல் டான்சர், தபேலா வித்வான்கள் (Classical Dancer, Tabala Player) ஆகிய பணிகளுக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level - 2 என்ற ஊதிய அளவின் படி, ரூ.19,900/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
தேர்வு முறை:
கிளாசிக்கல் டான்சர், தபேலா வித்வான்கள் (Classical Dancer, Tabala Player) ஆகிய பணிகளுக்கு தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வு (Written Test, Practical Demonstration) ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்:
எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பிடபிள்யூபிடி, பெண்கள் (SC / ST / EXSM / PWBD / Women) ரூ.250/- செலுத்த வேண்டும்.
மற்ற நபர்கள் - ரூ.500/- செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (22.01.2024) அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு https://ecr.indianrailways.gov.in/cris//uploads/files/1703481297752-null.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












