இந்திய ராணுவத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO DYSL) காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 04 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பி.இ, எம்.டெக் பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காம் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO DYSL)
மொத்த காலிப் பணியிடங்கள் : 04
பணி : Junior Research Fellow (JRF)
கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பிரிவில் பி.இ, பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 28 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : மேற்கண்ட பணியிடத்திற்கு மாதம் ரூ.31,000 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://drdo.gov.in/ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இணைய முகவரிக்கு 16.01.2022 தேதிக்குள் தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 16.01.2022 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியிலான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் https://drdo.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












