காலணி வடிவமைப்பு படிப்புகள் குறித்து தெரிந்து கொள்வோமா? ஸ்டூடண்ஸ்…!

இந்தியப் பொருளாதாரத்தில், தோல், தோல் பொருட்கள் மற்றும் காலணித் தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. நாட்டுக்கான முதல் பத்து அந்நியச் செலாவணி வருமானத்தில் ஒன்றாகும்.

இந்திய காலணி சந்தையானது, 2022 ஆம் ஆண்டு 15.22 பில்லியன் டாலர் மதிப்பை கொண்டுள்ளது. இது, 2023 ஆம் ஆண்டில் வருவாய் 12.83 வளர்ச்சியை பெற்று, 2029 ஆம் ஆண்டில், 35.43 பில்லியன் டாலரை எட்டும் என, புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பேஷன் டிசைன், சில்லறை விற்பனை, பேஷன் பொருட்கள், தோல் பொருட்கள் பிரிவுகளில் தேவையான திறனாளர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ், காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

காலணி  படிப்புக்கு தேர்வு எப்போது...?

மத்திய நிறுவனமான இது, குறுகிய கால தொழில்துறை சார்ந்த பயிற்சி மற்றும் திட்டங்களை வழங்குகிறது. நாட்டில் காலணி மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்துறையின் விரைவான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு பொருத்தமான அறிவு மற்றும் திறன்களை வழங்குவதன் வாயிலாக நாட்டில் மனித வளங்களை மேம்படுத்துதல்; சர்வதேச உற்பத்தித் தரத்தை அடைய இந்திய காலணித் தொழில்துறைக்கு பொருத்தமான உள்கட்டமைப்பை வழங்குதல் மற்றும் மேம்படுத்துதல்; தரமான காலணிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதி உற்பத்தியின் வளர்ச்சியை ஊக்குவித்தல் போன்றவையை பிரதான நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

கடந்த 1986 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட 'புட்வேர் டிசைன் அண்டு டெவெலப்மெண்ட் இன்ஸ்டிடியுட்' தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம்.

காலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தித் துறைகளில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளை வழங்குவதோடு, பேஷன் டிசைன், சில்லறை விற்பனை, பேஷன் பொருட்கள், தோல் பொருட்கள் பிரிவுகளில் தேவையான திறனாளர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இக்கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

வளாகங்கள் எங்கெங்கு உள்ளன?

முக்கியத்துவம் வாய்ந்த இந்த கல்வி நிறுவனத்தின் வளாகங்கள் நொய்டா, கொல்கத்தா, ரோடக், ரேபரேலி, சென்னை, சிந்த்வாரா, சண்டிகர், குனா, அங்கலேஷ்வர், ஹைதராபாத், பாட்னா ஆகிய இடங்களில் உள்ளன.

இளநிலை பட்டப்படிப்புகள்:

v பி.டெஸ்., - புட்வேர் டிசைன் அண்டு புரொடக்சன்

v பி.டெஸ்., - பேஷன் டிசைன்

v பி.டெஸ்., - லெதர், லைப்ஸ்டைல் அண்டு புரொடெக்ட் டிசைன்

v பி.பி.ஏ., - ரீடெயில் அண்டு பேஷன் மெர்ச்சன்டைஸ்

முதுநிலை பட்டப்படிப்புகள்:

v எம்.டெஸ்., - புட்வேர் டிசைன் அண்டு புரொடக்சன்

v எம்.டெஸ்., - பேஷன் டிசைன்

v எம்.பி.ஏ., - ரீடெயில் அண்டு பேஷன் மெர்ச்சன்டைஸ்

தேர்வு கட்டாயம்:

இந்தப் படிப்புகளில் சேர, வரும் 2024 ஆம் ஆண்டிற்கான ஏ.ஐ.எஸ்.டி., எனும் 'ஆல் இந்தியா செலக்‌ஷன் டெஸ்ட்' எழுத வேண்டும். இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு தனித்தனியாக நடத்தப்படும் இத்தேர்வு தலா 200 மதிப்பெண்களுக்கு நடக்கும்.

இத்தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் https://fddiadmissions.qualcampus.com/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிக்க, ஏப்ரல் 30, 2024 கடைசி நாளாகும்.

ஏ.ஐ.எஸ்.டி., தேர்வு நடைபெறும் நாள் மே 12, 2024. தேர்வு மற்றும் படிப்புகள் தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளவும்.

கூடுதல் விபரங்களுக்கு: https://www.fddiindia.com/

சேர்க்கை தொடர்பான அறிவிப்புகள் குறித்த தகவல் குறிப்பேட்டை பதிவிறக்கம் செய்ய...!

https://www.fddiindia.com/importants-updates

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
A footwear design and development company, started in the year 1986. The institute, functioning under the Union Ministry of Commerce and Industry, offers undergraduate and postgraduate courses. Let's see the details about it below?
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+