தன்லஷ்மி பேங்க் லிமிடெட் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், திறமையும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். மேலும் கூடுதல் விவரங்களைப் பெற https://ibpsonline.ibps.in/dbljosooct23/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
தன்லஷ்மி வங்கி லிமிடெட் என்பது கேரளாவின் திருச்சூரில் தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய தனியார் துறை வங்கி ஆகும். இந்த வங்கிக்கு கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், சண்டிகர், ஹரியானா ஆகிய மாநிலங்களில் 257 கிளைகள் மற்றும் 277 ஏடிஎம்கள், சிடிஎம்கள் உள்ளன.

தன்லஷ்மி வங்கி லிமிடெட் 1927-ம் ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி அன்று திருச்சூரில் தனலட்சுமி வங்கியாக ₹11,000 மூலதனத்துடன் ஏழு ஊழியர்களுடன் இணைக்கப்பட்டது. இது 1977 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்ட வணிக வங்கியாக மாறியது.
தன்லஷ்மி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல டெலிவரி சேனல்கள் மூலம் எங்கும், எப்போது வேண்டுமானாலும்/எப்படியும் வங்கிச் சேவையை விரிவுபடுத்துவதற்காக அதன் அனைத்து கிளைகளிலும் Flexcube இயங்குதளத்தில் சென்ட்ரலைஸ்டு பேங்கிங் தீர்வை (CBS) பயன்படுத்தி அறிமுகம் செய்தது. வங்கியின் நெட்வொர்க் அமைப்பை 24 மணி நேரமும் செயல்பட வைப்பதற்காக, பெங்களூரில் தரவு மையத்தை வங்கி அமைத்துள்ளது.
96 ஆண்டுகால வங்கிப் பாரம்பரியம் கொண்ட, கேரளாவின் திருச்சூரில் தலைமையிடமாகக் கொண்டு, இந்த தன்லஷ்மி வங்கி செயல்படுகிறது. தற்போது இங்கு காலியாக உள்ள ஜூனியர் ஆபீஸர், சீனியர் ஆபீஸர் (Junior Officers/ Senior Officers) பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளன. விருப்பம் உள்ளவர்கள் வரும் டிசம்பர் 21-ம் தேதிக்குள் (21-12-2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்தப் பணியிடங்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு துறையில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
31.03.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 21-12-2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பணியிடம் தொடர்பான அறிவிப்பை
https://www.dhanbank.com/pdf/46-Recruitment-of-Junior-Officers-Senior-Officers.pdf என்ற இணையதள லிங்க்கில் காணலாம்.
கூடுதல் விவரங்களுக்கு https://ibpsonline.ibps.in/dbljosooct23/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












