பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் (Dedicated Freight Corridor Corporation of India Limited-DFCCIL) காலியாக உள்ள கன்சல்டன்ட் (Consultant) பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு https://dfccil.com/upload/ADVETISEMENT_NO_-35_2023_G0ET.pdf என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.
பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (DFCCIL) அல்லது டெடிகேட்டட் பிரைட் காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (டிஎஃப்சிசிஐஎல்) என்ற நிறுவனம் மத்திய அரசின் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும், இது நிதி ஆதாரங்களின் திட்டமிடல், மேம்பாடு மற்றும் திரட்டுதல் மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு வழித்தடங்களின் கட்டுமானம், பராமரிப்பு மற்றும் இயக்கம் ஆகியவற்றை மேற்கொள்கிறது.
இண்டஸ்ட்ரியல் காரிடார், மேக் இன் இந்தியா, ஸ்டார்ட்அப் இந்தியா, ஸ்டாண்டப் இந்தியா, சாகர்மாலா, பாரத்மாலா, உடான்-ஆர்சிஎஸ், டிஜிட்டல் இந்தியா, பாரத்நெட், பர்வத்மாலா போன்ற இந்திய அரசின் முக்கிய திட்டங்களில் டிஎஃப்சிசிஐஎல்(DFCCIL) செயல்படுத்தி பயனடைகிறது.

டிஎஃப்சிசிஐஎல் நிறுவனம் (DFCCIL) இந்திய அரசாங்கத்தால் ஒரு அரசாங்க நிறுவனமாக நியமிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவின் (ரயில்வே அமைச்சகம்) நிறுவனம், திட்டமிடல் மற்றும் மேம்பாடு, நிதி ஆதாரங்களை திரட்டுதல் மற்றும் பிரத்யேக சரக்கு வழித்தடங்களின் கட்டுமானம், பராமரிப்பு மற்றும் இயக்கம் ஆகியவற்றை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டது. டிஎஃப்சிசிஐஎல் நிறுவனம் (DFCCIL) 30 அக்டோபர் 2006 அன்று நிறுவனங்கள் சட்டம் 1956-ன் கீழ் ஒரு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பெருமைவாய்ந்த பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில்தான் (Dedicated Freight Corridor Corporation of India Limited-DFCCIL) தற்போது கன்சல்டன்ட் (Consultant) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கன்சல்டன்ட் (Consultant) பணியிடங்களுக்கான கல்வித் தகுதி:
இந்த கன்சல்டன்ட் (Consultant) பணியிடங்களுக்கு இந்தியன் ரயில்வேயில் (Indian Railway) இன்ஜினியராக (Engineer) ஆக 30 ஆண்டுகள் பணி புரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
கன்சல்டன்ட் (Consultant) பணியிடங்களுக்கான வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வய
னது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கன்சல்டன்ட் (Consultant) பணியிடங்களுக்கான ஊதிய விவரம்:
தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு DFCCIL-ன் நிபந்தனைகளின் படி ஊதியம் வழங்கப்படும்
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்சல்டன்ட் (Consultant) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.1.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
கூடுதல் விவரங்களுக்கு https://dfccil.com/upload/ADVETISEMENT_NO_-35_2023_G0ET.pdf என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.


Click it and Unblock the Notifications












