மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் (CUTN) காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 26 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு சம்பந்தப்பட்ட துறையில் பி.எச்டி தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இப்பணியிடத்திற்கு கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகம் (CUTN)
பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :
- Professor - 8 பணியிடங்கள்
- Associate Professor - 13 பணியிடங்கள்
- Assistant Professor - 5 பணியிடங்கள்
மொத்த காலிப் பணியிடம் : 26
கல்வித் தகுதி :-
பேராசிரியர் - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பி.எச்டி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Associate Professor - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் முதநிலைப் பட்டம், Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Assistant Professor - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் M.Phil, முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 31.12.2021 தேதிக்குள் கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் கடைசி தேதி : 31.12.2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது, ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.750
- எஸ்.சி, எஸ்டி விண்ணப்பதார்களுக்கு ரூ.500
தேர்வு முறை :
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களைக் காணவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cutn.ac.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












