ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் தேசிய கடல்சார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

தேசிய கடல்சார் நிறுவனத்தில் (NIO) நிறுவனத்தில் காலியாக உள்ள Project Scientist, Project Associate உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட மத்திய அறிவியல் மற்றும் தொழித்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கீழ் செயல்பட்டு வரும் தேசிய கடல்சார் நிறுவனத்தில் (NIO) நிறுவனத்தில் காலியாக உள்ள Project Scientist, Project Associate உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.56 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் தேசிய கடல்சார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : தேசிய கடல்சார் நிறுவனம் (CSIR NIO)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 11

பணி : Project Scientist-I, Project Associate-I, Project Assistant, Project Associate-II

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Ph.D Earth Sciences, B.E/ B. Tech, M.Sc. Marine Sciences, B.Sc Botany , B.E/ B.Tech, B.Sc Chemistry, M.Sc Marine Science என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு :

Project Scientist-I, Project Associate-I, Project Associate-II பணிக்கு 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

Project Assistant பணிக்கு 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :

  • Project Scientist-I - ரூ.56000
  • Project Associate-I - ரூ.25000
  • Project Assistant - ரூ.20000
  • Project Associate-II - ரூ.28000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 02.01.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nio.org அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CSIR NIO Recruitment 2021: Apply online for Project Scientist, Project Associate and other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X