அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலில் (சிஎஸ்ஐஆர்) பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு csir.res.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் என்று அறியப்படும் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் (Council of Scientific and Industrial Research - CSIR) தன்னாட்சி கொண்ட அரசு அமைப்பாகும். இது இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் அமைச்சகத்தின் பங்களிப்புடன் நாட்டின் ஆய்வு மற்றும் தொழில் வளர்ச்சியில் ஒரு முன்மாதிரி அமைப்பாக சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது.
இது 1942 ஆம் ஆண்டு மத்திய நாடாளுமன்றம் (Central Legislative Assembly) எடுத்த தீர்மானத்தி படி, 1860 சமூகச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இது நாடு முழுவதும் 39 ஆய்வகங்களையும் மற்றும் 50 களப்பணி நிலையங்களையும் கொண்டுள்ளது. இதில் 17000 மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

இதன் ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பணிகளின் துறைகளாக விண்வெளிப் பொறியியல் (Aerospace Engineering), கட்டப் பொறியியல் (Structural Engineering) ஆகியவை கடல் அறிவியல், மூலக்கூறு உயிரியல், மாழையியல், வேதி, சுரங்கம், உணவு, பெட்ரோலியம், தோல் மற்றும் சூழல் ஆகியனவற்றில் ஆளுமையைச் செலுத்தி வருகின்றன.
இந்த பெருமைமிகு அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலில் தான் தற்போது அசிஸ்டென்ட் செக்சன் ஆபீஸர் 76, செக்ஷன் ஆபீஸர் 368 என மொத்தம் 444 இடங்கள் காலியாக உள்ளன.
கல்வித்தகுதி:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயதுத்தகுதி:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 12.1.2024 அடிப்படையில் 33 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்ச்சி முறை
இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு என்ற அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு மையம்:
இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு மையமாக சென்னை நகரம் இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய முடியும்.
விண்ணப்பக் கட்டணம்:
அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலில் காலியாக உள்ள இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 500 செலுத்த வேண்டும்.
மேலும் பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
கடைசி நாள்:
அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலில் காலியாக உள்ள இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரும் ஜனவரி மாதம் 12-ம் தேதிக்குள்(12.1.2024 மாலை 5:00 மணி) அனுபப வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு csir.res.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












