கவுன்சில் பார் சயிண்டிபிக் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச் நிறுவனமான சிஎஸ்ஐஆர் சார்பில் எச்.ஆர் டெவலப்மென்ட் குரூப் அமைப்பின் மூலமாக தேசிய தகுதித் தேர்வுகளை (நெட்) வருடந்தோறும் நடத்தி வருகிறது. இத்தேர்வின் மூலமாக இளம்நிலை ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளர் போன்ற காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன்படி, 2018-ஆம் ஆண்டிற்கான நெட் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியிட பிரிவுகள் : கெமிக்கல் சயின்ஸ், வானிலை, இயற்பியல் அறிவியல், ஓஷன் அண்ட் பிளானடரி அறிவியல், எர்த், லைப் சயின்ஸ், கணித அறிவியல்
கல்வித் தகுதி :
- இளம்நிலை ஆராய்ச்சியாளர் : தொடர்புடைய பிரிவில் பட்ட படிப்பு
- விரிவுரையாளர் : தொடர்புடைய பிரிவில் முதுநிலை பட்டப் படிப்பும், சில பிரிவுகளுக்கு பட்டப் படிப்பே போதுமானது.
வயது வரம்பு :-
இளம்நிலை ஆராய்ச்சியாளர்: 27 வயதுக்குள் இருக்க வேண்டும்
விரிவுரையாளர் : உச்ச பட்ச வயது வரம்பு இல்லை.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு நாள் : 2018 டிசம்பர் 16
தேர்வு மையம் : சென்னை
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களுக்கு http://www.csirhrdg.res.in/ எனும் லிங்க்கையும், விண்ணப்பிக்கும் முறை குறித்த விபரங்களுக்கு http://csirhrdg.res.in/notification_main_dec2018.pdf எனும் லிங்க்கையும் கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












