12-வது தேர்ச்சியா? மத்திய பாதுகாப்புப் படையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

மத்திய பாதுகாப்புப் படையில் (CRPF) காலியாக உள்ள Head Constable (Ministerial) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய பாதுகாப்புப் படையில் (CRPF) காலியாக உள்ள Head Constable (Ministerial) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 38 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

12-வது தேர்ச்சியா? மத்திய பாதுகாப்புப் படையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : மத்திய பாதுகாப்புப் படை (Central Reserve Police Force- CRPF)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Head Constable (Ministerial)

மொத்த காலிப் பணியிடங்கள் : 38

கல்வித் தகுதி :

மத்திய அல்லது மாநில அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், ஆங்கில தட்டச்சில் ஒரு நிமிடத்தில் 35 வார்த்தைகள் jட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, உடற் தகுதித் திறன் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://crpf.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CRPF Recruitment 2021: Apply for Head Constable (Ministerial) CRPF
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X