காக்னிசன்ட் (Cognizant) தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் அசோசியேட் புராஜக்ட்ஸ் (Associate Projects) பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காக்னிசன்ட் நிறுவனத்தில் அசோசியேட் புராஜக்ட்ஸ் பணியிடங்களுக்கு அதிக அளவில் ஊதியம் வழங்கப்படுகிறது. இந்தியாவில் செயல்படும் வரும் முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காக்னிசன்ட் நிறுவனமும் ஒன்றாகும்.
காக்னிசன்ட் தொழில்நுட்ப நிறுவனம் அல்லது காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நியூ ஜெர்சியை தலைமையிடமாகக் கொண்ட ஒரு தகவல் தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனமாக அமைந்துள்ளது. இந்நிறுவனம் சென்னையிலும் குறிப்பிடத்தக்க அளவில் செயற்பாடுகளை கொண்டுள்ளது
காக்னிசன்ட் நிறுவனம் 2007 ஃபார்ச்சூன் இதழினால் தொடந்து ஐந்தாம் முறையாக வேகமாக வளரும் 100 நிறுவனங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

மேலும் காக்னிசன்ட் நிறுவனம் பிஸ்னர் வீக்கால் மிக வேகமாக வளரும் முதல் பத்து நிறுவனங்களின் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. காக்னிசன்ட் ஒட்டுமொத்த ஆலோசக நிறுவனங்களிலும் 2012-க்கான தரப்பட்டியலில் 6-ஆம் இடத்தை பிடித்திருந்தது. அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தை தலைமையகமாக கொண்டுள்ள போதும் பெரும்பாண்மையான காக்னிசன்ட் நிறுவன ஊழியர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆவர். இந்தியாவில் சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர், ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, புனே மற்றும் கொச்சியில் அலுவலகங்களை கொண்டுள்ளது. மேலும் சீனாவின் ஷாங்காய் நகரிலும் ஆம்ஸ்டர்டாமிலும் வளர்மையங்களை கொண்டுள்ளது.
காக்னிசன்ட் நிறுவனம் வங்கிச்சேவை & நிதி, மருத்துவம், உற்பத்தி & தருக்கவியல், தகவல்,ஊடகம் & பொழுதுபோக்கு, தொலைதொடர்பு, காப்பீடு, உயிர் அறிவியல், வியாபாரம், விருந்தோம்பல்,
தொழில்நுட்பம் ஆகிய சேவைகளை தனது நுகர்வோருக்கு வழங்குகிறது.
இந்த பெருமைமிகு நிறுவனத்தில்தான் தற்போது அசோசியேட் புராஜக்ட்ஸ் பணியிடங்கள் காலியாகவுள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் பி.இ. அல்லது அதற்கு இணையான படிப்பை (Bachelor's in engineering or equivalent) முடித்திருக்க வேண்டும்.
மேலும், 10 ஆண்டுகளுக்கும் அதிகமான தொழில்முறை அனுபவம் உள்ளவர்கள் மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்பட உள்ளதாக நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் Cognizant இணையதளம் சென்று பணி தொடர்பான அறிவிப்பை படித்து பார்த்து ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்வதற்கான இறுதி நாள் இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இருப்பினும் விருப்பம் உள்ளவர்கள் முன்கூட்டியே விண்ணப்பத்தை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேலும், கூடுதல் விவரங்களுக்கு
https://careers.cognizant.com/global/en/job/00046463083/Associate-Projects என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












