10-வது மட்டும்தான் படித்துள்ளீர்களா...! கவலை வேண்டாம்..காபி வாரியம் அழைக்கிறது..!!!

கர்நாடகாவிலுள்ள இந்தியக் காப்பி வாரியத்தில் (Coffee Board) காலியாக உள்ள ஸ்டாப் கார் டிரைவர் (Staff Car Driver) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன் அடையலாம். கூடுதல் விவரங்களுக்கு
https://drive.google.com/file/d/1LQNWAlOCfr_7xCmmzld6ePzWl9zju0eu/view?pli=1 என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

இந்தியக் காப்பி வாரியம் (Coffee Board of India) என்பது இந்தியாவில் காப்பி உற்பத்தியை மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கத்தின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் அமைப்பு ஆகும். இதன் தலைமை அலுவலகம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் அமைந்துள்ளது.

இந்தியக் காப்பி வாரியம் 1942ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றச் சட்டத்தால் நிறுவப்பட்டது. 1995 வரை காப்பி வாரியம் பல விவசாயிகள் உற்பத்தி செய்த காபியினை மொத்தமாகச் சேர்த்து விநியோகம் மற்றும் விற்பனை செய்தது. இதன் பின்னர் இந்தியாவில் பொருளாதார தாராளமயமாக்கல் காரணமாகக் காப்பி சந்தைப்படுத்தல் தனியார்த் துறை நடவடிக்கையாக மாறியது.

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் காப்பி விற்பனை மற்றும் நுகர்வு ஊக்குவித்தல், காப்பி ஆராய்ச்சி நடத்துதல், சிறு காப்பி உற்பத்தியாளர்களுக்கு நிதி உதவி, தொழிலாளர்களின் பணி நிலைமைகளைப் பாதுகாத்தல் மற்றும் விற்கப்படாத காப்பி உபரி நிர்வகித்தல் ஆகியவை காப்பி வாரியத்தின் முக்கியக் கடமையாக உள்ளது.

10-வது மட்டும்தான் படித்துள்ளீர்களா...! கவலை வேண்டாம்..காபி வாரியம் அழைக்கிறது..!!!

இந்த பெருமைமிகு இந்தியக் காப்பி வாரியத்தில்தான் (Coffee Board) தற்போது ஸ்டாப் கார் டிரைவர் (Staff Car Driver) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ஸ்டாப் கார் டிரைவர் (Staff Car Driver) பணியிடங்களுக்கான கல்வித்தகுதி விவரம்:

ஸ்டாப் கார் டிரைவர் (Staff Car Driver) பணியிடங்களுக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர்.

ஸ்டாப் கார் டிரைவர் (Staff Car Driver) பணியிடங்களுக்கு வயது த்தகுதி விவரம்:

இந்த டிரைவர் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 18 வயது முதல் 27 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

ஸ்டாப் கார் டிரைவர் (Staff Car Driver) பணியிடங்களுக்கு சம்பள விவரம்:

ஸ்டாப் கார் டிரைவர் (Staff Car Driver) பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்கள் லெவல்-2(Level - 2 ) அடிப்படையில், ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, டிரேட் தேர்வு, மெடிக்கல் தேர்வு(Written Examination, Skill Test, Trade Test, Medical Examination) ஆகிய தேர்வுகளின் அடிப்படையில் இந்த டிரைவர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.விண்ணப்ப கட்டணம்:

இந்தப் பணியிடங்களுக்கு எஸ்சி, எஸ்டி, ஓபிசி, எக்சர்வீஸ்மென், பெண்கள் (SC / ST / OBC / EXSM / Female) ஆகியோர் விண்ணப்ப கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

மற்ற நபர்கள் - ரூ.100/- செலுத்தவேண்டும்.

விண்ணப்பிக்கும் வழிமுறை: இந்த இந்தியக் காப்பி வாரிய பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 22..01.2024 என்பது இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகும்.

கூடுதல் விவரங்களுக்கு

https://drive.google.com/file/d/1LQNWAlOCfr_7xCmmzld6ePzWl9zju0eu/view?pli=1 என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Coffee Board has recently released a new recruitment to fill the post of Staff Car Driver. We are inviting interested persons applications for the driver post. For more details please login into https://drive.google.com/file/d/1LQNWAlOCfr_7xCmmzld6ePzWl9zju0eu/view?pli=1
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+