சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தில் (CMDA) காலியாக உள்ள Assistant Planner மற்றும் Planning Assistant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 30 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.1.77 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணயம் (CMDA)
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 30
பணி : Assistant Planner மற்றும் Planning Assistant
கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ, முதுநிலைப் பட்டம், பி.இ, D.Arch, LCE, DCE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 37 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் :
- Planner - ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை
- Planning Assistant - ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரை
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : கீழே இணைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://cmdadirectrecruitment.in/ எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும். பின், பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது, ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500
- எஸ்.சி, எஸ்டி உள்ளிட்ட விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cmdadirectrecruitment.in/ எனும் அதிகாரப்பூர்வ லிங்க்கை காணவும்.



Click it and Unblock the Notifications












