சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய தோல் ஆராய்ச்சி மையம் (CLRI)-யில் காலியாக உள்ள ஸ்டாப் நர்ஸ் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் இரண்டு பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு பி.எஸ்சி நர்சிங், டிப்ளமோ நர்சிங் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.20 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும் இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
காலிப் பணியிடம் மொத்தம் : 02
பணி : ஸ்டாப் நர்ஸ்
கல்வித் தகுதி : B.Sc Nursing, Diploma In Nursing துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.20,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.ciri.org.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 15.09.2020 அன்று காலை 09.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ciri.org.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












