மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழில்துறை பாதுகாப்புப் படையில் (CISF) காலியாக உள்ள உதவி இயக்குநர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.2.10 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு கணிதத் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையுங்கள்.

நிர்வாகம் : மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 01
பணி : Assistant Director (Accounts)
கல்வித் தகுதி :
- Accounts பிரிவில் ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேலும், மத்திய அரசு துறைகளில் பணியாற்றி இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.67.700 முதல் அதிகபட்சம் ரூ.2,08,700 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 05.10.2021 தேதிக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின்றி Deputation மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.cisf.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












