பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் (Central Institute Of Plastics Engineering & Technology- Cipet) நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த மேலாளர், மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1.23 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு எம்.இ, எம்.டெடக் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் (Cipet)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : மூத்த மேலாளர், மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி :
- Chief Manager - M.E அல்லது M.Tech, PhD, MBA அல்லது PG, B.Com, CA அல்லது ICWA என இவற்றில் ஒரு துறையில் தேர்ச்சி பெற்று 12 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- Manager - MBA அல்லது PG தேர்ச்சியுடன் பணியில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.78,800 முதல் அதிகபட்சம் ரூ.1,23,100 மாத ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து 30.07.2021 தேதிக்குள் கீழ்கண்ட முகவரியில் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவம் பெற - இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
Sr.Officer (Admin./HR), CIPET Head Office, T.V.K. Industrial Estate, Guindy, Chennai - 600 032
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.07.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் https://www.cipet.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












