மத்திய அரசிற்கு உட்பட்டு மதுரையில் செயல்பட்டு வரும் பெட்ரோ கெமிக்கல்ஸ் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி நிறுவனத்தில் (CIPET) காலியாக உள்ள விரிவுரையாளர் மற்றும் பயிற்றுவிப்பாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.35 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி நிறுவனம் (CIPET)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 04
பணி : விரிவுரையாளர் மற்றும் பயிற்றுவிப்பாளர்
கல்வித் தகுதி :
Lecturer - கணிதம், இயற்பியல் பாடங்களில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Instructor - பி.இ, பி.டெக் தேர்ச்சியுடன் ஒரு வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் 3 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.25,000 முதல் ரூ.35,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 23.04.2021 தேதிக்குள் தங்களது விண்ணப்பப் படிவத்தினை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
Director & Head,
CIPET:CSTS மதுரை,
கணக்கெடுப்பு எண்: 489/1,
பெரியார் சமத்தருவபுரம் அருகே,
திருவத்தாவூர்,
மதுரை -625110
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 23.04.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் www.cipet.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












