மத்திய அரசுக்குச் சொந்தமான சிப்பெட் (CIPET) நிறுவனத்தில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோ, ரிசர்ச் அசோசியேட் (Junior Research Fellow (JRF), Research Associate I) ஆகிய காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியாகியுள்லது.
இந்தப் பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
கூடுதல் விவரங்களுக்கு https://www.cipet.gov.in/job-opportunities/contractual_positions.php என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
சிப்பெட் என்று சுருக்கமாக அழைக்கப்படும் மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் (CIPET அல்லது Central Institute of Plastics Engineering and Technology) மத்திய அரசின், வேதியல் மற்றும் உரங்களுக்கான அமைச்சகத்தின், வேதியல் மற்றும் பெட்ரோலிய வேதியல் துறையின் கீழ் தன்னாட்சி பெற்ற தொழில் நுட்பக் கழகமாக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.

1968-ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட மத்திய பிளாஸ்டிக் பொறியில் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் தலைமையகம் (CIPET) தமிழ்நாடு மாநிலம் சென்னையில் அமைந்துள்ளது. அகமதாபாத், அமிர்தசரச்ஸ், அவுரங்காபாத், போபால், புவனேசுவரம், சென்னை, கவுஹாத்தி, ஹைதராபாத், ஹாஜிப்பூர், ஹால்டியா, இம்பால், ஜெய்ப்பூர், கொச்சி, லக்னோ, மைசூர், பானிபட் ஆகிய இடங்களில் மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் மையங்கள் செயல்படுகின்றன. அனைத்து மையங்களிலும் உயர்தர பரிசோதனை கூடங்களுடன் கூடிய பிளாஸ்டிக் மற்றும் பாலிமர் தொழில் சார்ந்த தொழில் நுட்பக் கல்வியும், ஆராய்ச்சிப் படிப்புகளும் உள்ளன.
பிளாஸ்டிக் தொழில்நுட்பக் கல்வி தொடர்பான மூன்றாண்டு பட்டயப் படிப்புகள், நான்காண்டு இளநிலை தொழில் நுட்ப படிப்புகள், இரண்டாண்டு முதுநிலை தொழில்நுட்ப படிப்புகள் மற்றும் ஆய்வுப் படிப்புகளை சிப்பெட் வழங்குகிறது.
இந்த பெருமைவாய்ந்த சிப்பெட் நிறுவனத்தில்தான் தற்போது ஜூனியர் ரிசர்ச் பெல்லோ, ரிசர்ச் அசோசியேட் (Junior Research Fellow (JRF), Research Associate I) ஆகிய காலியிடங்கள் உருவாகியுள்ளன.
ஜூனியர் ரிசர்ச் பெல்லோ, ரிசர்ச் அசோசியேட் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி விவரம்:
இந்த சிப்பெட் (CIPET) நிறுவன பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் எம்.எஸ்சி, எம்.இ., எம்.டெக், பிஎச்.டி.(M.Sc, ME, M.Tech, Ph.D) பட்டப்படிப்பு, பட்டமேல்படிப்பு, ஆராய்ச்சி படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
ஜூனியர் ரிசர்ச் பெல்லோ, ரிசர்ச் அசோசியேட் பணியிடங்களுக்கான வயதுத்தகுதி விவரம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பானது 29.12.2023 அன்றைய தேதியின்படி, அதிகபட்சம் 35 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஜூனியர் ரிசர்ச் பெல்லோ, ரிசர்ச் அசோசியேட் பணியிடங்களுக்கான சம்பள விவரம்:
இந்த சிப்பெட் (CIPET) நிறுவன பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது டிஎஸ்டி (DST) விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவர்.
சிப்பெட் நிறுவனப் பணிக்கு தேர்வு செய்யும் விதம்:
இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு (Written Test, Interview) ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த சிப்பெட்(CIPET) நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் 29-ம் தேதிக்குள் (29.12.2023) வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.
சம்பளம், கல்வித்தகுதி, விளம்பரங்கள் போன்ற விவரங்களைக் காண கீழ்கண்ட லிங்க்குகளை கிளிக் செய்யலாம்.
https://www.cipet.gov.in/job-opportunities/downloads/13-12-2023-001/Advertisement.jpg
https://www.cipet.gov.in/job-opportunities/downloads/13-12-2023-001/Essential_Qualification.pdf
கூடுதல் விவரங்களுக்கு https://www.cipet.gov.in/job-opportunities/contractual_positions.php என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












