மத்திய அரசு வேலை வேண்டுமா... உடனே விண்ணப்பம் செய்யுங்க....

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிப்பெட் என்று அழைக்கப்படும் சென்டிரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பெட்ரோகெமிக்கல்ஸ் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி (Central Institute of Petrochemicals Engineering & Technology -CIPET) நிறுவனத்தில் தற்போது லெக்சரர், அசிஸ்டெண்ட் பிளேஸ்மெண்ட் கன்சல்டன்ட் பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு https://www.cipet.gov.in/job-opportunities/downloads/08-01-2024-001/Advertisement.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.

சிப்பெட் என்று சுருக்கமாக அழைக்கப்படும் மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் (CIPET அல்லது Central Institute of Plastics Engineering and Technology) மத்திய அரசின், வேதியல் மற்றும் உரங்களுக்கான அமைச்சகத்தின், வேதியல் மற்றும் பெட்ரோலிய வேதியல் துறையின் கீழ் தன்னாட்சி பெற்ற தொழில் நுட்பக் கழகமாக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.

1968-ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட மத்திய பிளாஸ்டிக் பொறியில் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் தலைமையகம் (CIPET) தமிழ்நாடு மாநிலம் சென்னையில் அமைந்துள்ளது. அகமதாபாத், அமிர்தசரச்ஸ், அவுரங்காபாத், போபால், புவனேசுவரம், சென்னை, கவுஹாத்தி, ஹைதராபாத், ஹாஜிப்பூர், ஹால்டியா, இம்பால், ஜெய்ப்பூர், கொச்சி, லக்னோ, மைசூர், பானிபட் ஆகிய இடங்களில் மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் மையங்கள் செயல்படுகின்றன. அனைத்து மையங்களிலும் உயர்தர பரிசோதனை கூடங்களுடன் கூடிய பிளாஸ்டிக் மற்றும் பாலிமர் தொழில் சார்ந்த தொழில் நுட்பக் கல்வியும், ஆராய்ச்சிப் படிப்புகளும் உள்ளன.

மத்திய அரசு வேலை வேண்டுமா... உடனே விண்ணப்பம் செய்யுங்க....

இந்த பெருமை வாய்ந்த சிப்பெட் என்று அழைக்கப்படும் சென்டிரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பெட்ரோகெமிக்கல்ஸ் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி (Central Institute of Petrochemicals Engineering & Technology -CIPET) நிறுவனத்தில்தான் தற்போது லெக்சரர், அசிஸ்டெண்ட் பிளேஸ்மெண்ட் கன்சல்டன்ட் பணியிடங்கள் காலியாக உள்ளன.

சிப்பெட் நிறுவனத்தில் லெக்சரர் (Lecturer) பிரிவில் 4 பணியிடங்களும், அசிஸ்டெண்ட் பிளேஸ்மெண்ட் கன்சல்டன்ட் பிரிவில் (Assistant Placement Consultant) 1 பணியிடமும், கன்சல்டன்ட் டிரைனி பிரிவில் (Consultant Trainee) 1 பணியிடமும், இன்ஸ்டிரக்ட்டர் பிரிவில் (Instructor) 2 பணியிடங்களும் காலியாக உள்ளன.

சிப்பெட் (CIPET) பணியிடங்களுக்கான கல்வித்தகுதி விவரம்:

இந்த மத்திய அரசு சார்ந்த பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor's Degree, Master Degree, BE, B.Tech, ME, M.Tech, MBA, Diploma, B.Sc, Ph.D ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சிப்பெட் (CIPET) பணியிடங்களுக்கான வயதுத்தகுதி விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 65 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.

சிப்பெட் (CIPET) பணியிடங்களுக்கான சம்பள விவரம்:
இந்த சிப்பெட் நிறுவன பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.20,000/- முதல் ரூ.35,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

தேர்வு முறை:

சிப்பெட் (CIPET) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த CIPET நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (05.02.2024) தபால் செய்ய வேண்டும்.

இணையதள முகவரி:

கூடுதல் விவரங்களுக்கு https://www.cipet.gov.in/job-opportunities/downloads/08-01-2024-001/Advertisement.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CIPET Chennai invites applications for recruitment of Lecturer, Assistant Placement Consultant posts. The applicants are requested to Download Application Form through Official Website https://www.cipet.gov.in/. Before applying for the recruitment, candidates must carefully read the CIPET Chennai Project Assistant 2024 notification and ensure their eligibility.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+