செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் (நாமக்கல்) இணைந்து நடத்தும், இந்த மைக்ரோ வேலைவாய்ப்பு முகாமில், Euro calibration technique, VENTURA SECURITIES LTD மற்றும் Kokuyo Camlin Ltd ஆகிய நிறுவனங்கள் பங்கேற்று தகுதியான நபர்களை தேர்வு செய்கிறது.

தனியார்துறை ஆட்சேர்ப்பு 2023
எங்கே....!
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம்,
வெண்பாக்கம்,
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி (ஐ.டி.ஐ.,) வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
முகாமில் பங்கு பெறும் முன்னணி நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப உள்ளன.
சென்னையில் உள்ள மூன்று நிறுவனங்களில் காலியாக உள்ள விற்பனை பிரதிநிதி, விற்பனை நிர்வாகி பணியிடங்களுக்கு, இந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வாகும் நபர்கள் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் பெறுவர்.
முக்கியம்....!
இவ்வேலைவாய்ப்பு முகாமின் வாயிலாக, தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெறும் பயனாளிகளின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு விவரங்கள் ரத்து செய்யப்பட மாட்டாது.
ப்ளீஸ் மறக்காதீங்க...!
நேர்காணல் ஜூன் 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 4 மணி வரை நடைபெறவுள்ளது. பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் சுய விவரக் குறிப்புடன் (Biodata) ஆகியவற்றை நேர்காணலின் போது, உடன் எடுத்து செல்ல வேண்டும்.
மைக்ரோ தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பற்றிய விவரங்கள் அறிய கீழே உள்ள லிங்க்கை க்ளிக் பண்ணுங்க ப்ளீஸ்...
https://www.tnprivatejobs.tn.gov.in/ViewData/jobfair_view/342306190002
https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/342306190002


Click it and Unblock the Notifications












