மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் C-DAC எனும் கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள Project Officer (Finance & HRD) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.20 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம் (CDAC)
மேலாண்மை : மத்திய அரசு
பணி விபரங்கள்: Project Officer (Finance & HRD)
மொத்த காலிப் பணியிடங்கள் : 02
கல்வித் தகுதி :
- CA, MBA in Finance, HR, Personnel Management, முதுநிலைப் பட்டம் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
- மேலும், பணியில் 03 முதல் 06 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 12.09.2021 தேதியில் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.31,000 முதல் அதிகபட்சம் ரூ.2,20,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 12.09.2021 தேதிக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.cdac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












