மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சிடிஏசி எனும் கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட மேலாளர், திட்ட பொறியாளர் உள்ளிட்ட 132 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு எம்.இ, எம்.டெக், பி.எச்டி படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம் (CDAC)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 132
- திட்ட மேலாளர் - 10
- திட்ட பொறியாளர் - 122
வயது வரம்பு : மேற்கண்ட திட்ட பொறியாளர் பணிக்கு 31.01.2020 தேதியின்படி 37 வயதிற்கு உட்பட்டும், திட்ட மேலாளர் பணிக்கு 50 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : பொறியியல் துறையில் எம்இ, எம்.டெக்,. பி.எச்டி முடித்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்தில் விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://cdac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 11.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cdac.in/index.aspx?id=ca_noida_recruit_Feb2020 என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












