பட்டப்படிப்பு, டிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை காத்திருக்கு...!!!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சென்டிரல் அரக்நாட் அன்ட் கொக்காவோ மார்க்கெட்டிங் அண்ட் பிராசசிங் கோ-ஆப்பரேட்டிவ் லிமிடெட் (Central Arecanut and Cocoa Marketing and Processing Co-operative Limited) என்று அழைக்கப்படும் CAMPCO நிறுவனத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட் எக்சிகியூட்டிவ் (Junior Assistant Executive ) பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பம் செய்யலாம்.கூடுதல் விவரங்களுக்கு https://campco.org/careers/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

கேம்ப்கோ நிறுவனம், கர்நாடக மாநிலம் மங்களூரில் 1973-ம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி தொடங்கப்பட்டது.

கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள பால், பாக்கு விவசாயிகளின் துயர் துடைக்க இது உருவாக்கப்பட்டது.

பட்டப்படிப்பு, டிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை காத்திருக்கு...!!!

தற்போது கேம்ப்கோ (CAMPCO) குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், புது டெல்லி, பீகார், தமிழ்நாடு, ஒடிசா, அசாம் மற்றும் கோவா போன்ற இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் தனது சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது. மத்திய அரசின் சட்டங்களின் கீழ் கேம்ப்கோ(CAMPCO) இப்போது பல மாநில கூட்டுறவு நிறுவனமாக மாறியுள்ளது.

இந்த அமைப்பு முக்கியமாக பாக்கு மற்றும் கோகோ கொள்முதல், சந்தைப்படுத்தல், விற்பனை மற்றும் பதப்படுத்துதல் ஆகிய துறைகளில் ஈடுபட்டுள்ளது.

மேலும், நிறுவனம் தற்போது ரப்பர் மற்றும் கருப்பு மிளகு சந்தையிலும் நுழைந்துள்ளது.
கேம்ப்கோ நிறுவனத்தின் (CAMPCO) தலைமை அலுவலகம் கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே புத்தூரில் உள்ளது. அதன் கிளைகள் இந்தியா முழுவதும் பரவியுள்ளது.

நிறுவனம் 1986 ஆம் ஆண்டு கர்நாடகாவில் தட்சிண கன்னடா மாவட்டத்தில் புத்தூரில் சாக்லேட் உற்பத்தி ஆலையை நிறுவியது. கேம்ப்கோ சாக்லேட் உற்பத்தி தொழிற்சாலை,1 செப்டம்பர் 1986 அன்று அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் கியானி ஜைல் சிங்கால் திறந்து வைக்கப்பட்டது.

தொழிற்சாலை திறப்பு அப்போது தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. கேம்ப்கோ தொழிற்சாலை சாக்லேட்டுகள் மற்றும் கோகோவின் பிற தயாரிப்புகளை அதன் சொந்த பிராண்டின் கீழும் நெஸ்லே நிறுவனத்திற்கும் உற்பத்தி செய்கிறது.

இந்த பெருமை மிகு கேம்ப்கோ நிறுவனத்தில்தான் தற்போது ஜூனியர் அசிஸ்டெண்ட் எக்சிகியூட்டிவ் பணியிடங்கள் காலியாக உள்ளன. தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.52650/- வரை சம்பளம் வழங்கப்படும். மொத்தம் 11 Junior Assistant Executive பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.

இந்த பணியிடங்களுக்கு கல்வி தகுதியாக விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பட்டப்படிப்பு, பி.காம்., பி.எஸ்சி, பி.ஏ, பிபிஎம், டிப்ளமோ படிப்புகளில் தேர்ச்சி (Degree, B.Com / B.Sc / BA / BBM / Diploma) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடத்துக்கு தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.52650/- வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணமாக எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு Rs.295/-ம், பொதுப் பிரிவினருக்கு Rs.590/-ம் வசூலிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்ய படுவார்கள்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். வரும் டிசம்பர் 15-ம் தேதிக்கு(15.12.2022) பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு https://campco.org/careers/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Apply for 11 Junior Assistant Executive vacancies. Central Arecanut and Cocoa Marketing and Processing Co-operative Limited invited applications from eligible and interested candidates to fill up Junior Assistant Executive Posts through CAMPCO official notification December 2023. Job seekers who are looking for a career in Mangaluru – All India Government can make use of this opportunity. Interested candidates can Apply Online & Offline on or before 15-Dec-2023.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+