பயிற்சி காலத்தில் ஒரு லட்சம் ஊதியம் வழங்கும் நிறுவனம் தெரியும்..?

'பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்' (BHEL) நிறுவனத்தில், மெக்கானிக்கல், சிவில் பிரிவுகளில் காலியாக உள்ள 'Supervisor Trainee மற்றும் Trainee' பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தகுதியான நபர்கள் விண்ணப்பிக்க இன்னும் நான்கு நாட்கள் தான் உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.

நிர்வாகம்: 'பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்' (BHEL)

மேலாண்மை: மத்திய அரசு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - நவம்பர் 25,2023

65 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் ரூ.1 லட்சம் ஊதியத்தில் பயிற்சி...!

பணி விவரங்கள்

Trainee (Mechanical)

Supervisor Trainee (Civil)

Human Resource

பணியிடங்கள் எண்ணிக்கை: 75

விண்ணப்பக்கட்டணம்

விண்ணப்பிக்க ஜி.எஸ்.டி.-யுடன் சேர்த்து ரூ.795 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். பட்டியலின/ பழங்குடியின பிரிவினர் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கபட்டுள்ளது. இருப்பினும், 'ப்ராசசிங்' கட்டணத்தை கட்டாயம் செலுத்த வேண்டும்.

வயது வரம்பு

01.10.2023 படி 27 வயதிற்குட்பட்டவர்கள் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு தளர்வுகளுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக காணலாம்.

கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில், விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 65% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

பணியிடம்

தேர்வு செய்யப்படுபவர்கள் திருச்சி, போபால், ஐதராபாத், ஹரித்வார், ஜான்சி, கார்ப்ரேட் ஆபீஸ், பவர் செக்டார் ஆகிய பகுதியில் உள்ள அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவர்.

ஊதியம்

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு, பயிற்சி காலத்தில் ரூ.32,000 - ரூ.1,00,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும். ஊதியம், இதர சலுகைகள் ஆகிய விவரங்களை அறிய கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேர்வு முறை

Ø ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய முறையில், விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

Ø ஆர்வமும், தகுதியும் உள்ளகள் விண்ணப்பப் படிவத்தை, https://careers.bhel.in என்ற இணையதளம் வாயிலாக பூர்த்தி செய்ய வேண்டும்.

Ø அந்த விண்ணப்ப படிவத்துடன் தேவையான ஆவணங்களை கட்டாயம் இணைக்க வேண்டும்.

பணி காலம்

இரண்டு ஆண்டு கால ஒப்பந்தம் அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்படுவர். பணி திறன் அடிப்படையில் ஒப்பந்த காலம் நீட்டிக்கப்படலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

v விண்ணப்பதாரர்கள் BHEL இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://careers.bhel.in:8443/bhel/jsp/#openings- கிளிக் செய்யவும்.

v முதல் பக்கத்தில் உள்ள மெனு பிரிவுகளில் "careers" என்பதை கிளிக் செய்யவும்.

v அடுத்து"BHEL Recruitment 2023" என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

v பின் விவரங்களை பூர்த்தி செய்து உடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றி, submit button- ஐ-கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இணையதளம் பற்றிய விவரங்களை அறிய கீழே சொடுக்கவும்...!

https://careers.bhel.in/st_2023/static/ST_Detailed Advertisement.pdf -

https://www.apprenticeshipindia.gov.in/ -

https://careers.bhel.in/bhel/jsp/

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Bharat Heavy Electricals Limited (BHEL), the largest engineering and manufacturing company in the energy and infrastructure sectors of the country, has announced that eligible candidates can apply for the vacant posts in the civil and mechanical department by November 25. Be ready to apply immediately as applications can be submitted online
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+