மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பேங்க் ஆப் இந்தியாவில் (BOI) காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் FLC Counselor பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.18 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மேலாண்மை : மத்திய அரசுப் பணி
நிர்வாகம் : பேங்க் ஆப் இந்தியா (BOI)
மொத்த காலிப் பணியிடம் : 04
பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :
- Office Assistant - 02 பணியிடங்கள்
- FLC Counselor - 02 பணியிடங்கள்
வயது வரம்பு :
- Office Assistant பணிக்கு 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- FLC Counselor பணிக்கு 64 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி :
Office Assistant - விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் BSW, BA, B.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
FLC Counselor - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பட்டப் படிப்பு, முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்று ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் :
- Office Assistant ரூ.15,000
- FLC Counselor - ரூ.18,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.bankofindia.co.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று பூர்த்தி செய்து 20.12.2021 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களைப் பெறவும், விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்யவும் www.bankofindia.co.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதள லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












