மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பும் வகையில் யுபிஎஸ்சி சார்பில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் யுபிஎஸ்சி-யின் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பயனடையலாம்.

மேலாண்மை : மத்திய அரசு
அமைப்பு : மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்
மொத்த காலிப் பணியிடம் : 81
பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:-
- கூடுதல் உதவி இயக்குநர் : 01
- பொறியாளர் : 01
- முதன்மை வடிவமைப்பு அதிகாரி : 01
- துணை வடிவமைப்பாளர் : 07
- துணை இயக்குநர் : 68
- உதவி பொறியாளர் : 03
கல்வித் தகுதி : பி.இ அல்லது பி.டெக்
முன் அனுபவம் : 2 முதல் 10 வருடம்
வயது வரம்பு : 35 முதல் 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : www.upsconline.nic.in என்னும் இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
கட்டண விபரம்:-
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் : ரூ.25
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 01
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும் விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://upsconline.nic.in/ora/oraauth/candidate/download_ad.php?id=195 அல்லது https://upsconline.nic.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












