TNDALU 3 Years Course Admission: இன்று முதல் 3 ஆண்டுகள் சட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்...!

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில், 3 ஆண்டு கால எல்.எல்.பி., ஹானர்ஸ் மற்றும் எல்.எல்.பி., சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க, ஆக.10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இப்படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை குறித்து அறிந்து கொள்வோம்?

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ், 15 அரசு சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், பி.ஏ. எல்.எல்.பி., ஹானர்ஸ், பி.பி.ஏ. எல்.எல்.பி., ஹானர்ஸ், பி.காம். எல்.எல்.பி., ஹானர்ஸ், பி.சி.ஏ. எல்.எல்.பி., ஹானர்ஸ் ஆகிய நான்கு இளநிலைப் படிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

மூன்று ஆண்டு சட்ட படிப்புகளுக்கு ஆக.10 வரை விண்ணப்பிக்கலாம்...!

இவற்றில், ஐந்து ஆண்டு மற்றும் மூன்று ஆண்டு கால எல்.எல்.பி., ஹானர்ஸ், எல்.எல்.பி., சட்டப் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இதேபோல், பல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள சீர்மிகு சட்டப் பள்ளியில், 5 ஆண்டு கால சட்டப் படிப்புகளுக்கு 624 இடங்கள் உள்ளன.

நடப்பு கல்வியாண்டு (2023-2024) ஐந்து ஆண்டு சட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு, மே.15 ஆம் தேதி ஆன்லைன் வாயிலாக துவங்கி, ஜூன்.10ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

மூன்று ஆண்டு சட்டப்படிப்பு

இந்நிலையில், மூன்று ஆண்டுகள் சட்டப்படிப்புகளுக்கு, ஜூலை 17 முதல் கால அவகாசம், ஜூன்.10 வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக பொறுப்பு பதிவாளர் ரஞ்சித் ஓமன் ஆப்ரஹாம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் சீர்மிகு சட்டப் பள்ளி ஆகியவற்றில் மூன்று ஆண்டு கால சட்டப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.

இந்தப் படிப்பில் சேர, இன்று முதல்(ஜூலை 17) முதல் மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

http://tndalu.ac.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். மாணவர்கள் ஆக.10ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம்''.

இவ்வாறு, அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நுழைவு தேர்வு பற்றி தெரியும்?

இந்திய பார் கவுன்சில் சட்டக் கல்வி விதிகளின்படி, எல்எல்எம் எனப்படும் முதுகலை சட்டப் படிப்புக்குத் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு (PGCETL) ஒன்றை நடத்தப் பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த நுழைவுத் தேர்வை இந்திய பார் கவுன்சில் அறிமுகப்படுத்தும் வரை, நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும், பழைய நடைமுறையே அமலில் இருக்கும். PGCETL தேர்வு அமல்படுத்தப்பட்ட பின், அந்தத் தேர்வு முடிவை அடிப்படையாகக் கொண்டே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது.

அதே நிலையில், இந்தியாவில் 2013 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் ஆண்டு மட்டுமே படிக்கும் முதுகலை சட்டப் படிப்பு (எல்எல்எம்) நீக்கப்பட உள்ளது. இளங்கலை சட்டப் படிப்பை முடித்தவர்களுக்காக, இந்தப் படிப்பை யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு அறிமுகப்படுத்தியது.

எனினும் இனி வருங்காலத்தில், ஓராண்டுக்கான முதுகலை சட்டப்படிப்பு இருக்காது. அதற்கு பதிலாக முதுகலை சட்டப் படிப்பு இரண்டு ஆண்டுகளாகக் குறைக்கப்பட உள்ளது. இதனால், இப்படிப்புகளுக்கு 4 செமஸ்டர்கள் மட்டுமே நடைபெறும்.

முழு விபரங்களுக்கு....!

மூன்று ஆண்டு கால சட்டப்படிப்புகளுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட விபரங்களை அறிய கீழே கிளிக் செய்யவும்...

https://tndalu.ac.in/index.php

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNDALU Admission 2023-2024: Tamil Nadu Dr. Ambedkar Law University has announced to apply for the three-year law course from today.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+