TNPSC Librarian Recruitment 2023
தமிழ்நாடு ஒருங்கிணைந்த நூலக பணிகள், சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதிவிகளுக்கான 36 காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் வாயிலாக, தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு மார்ச்.,1ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
நிர்வாகம் : தமிழ்நாடு ஒருங்கிணைந்த நுாலக பணிகள்/ சார் நிலைப் பணிகள்.
மேலாண்மை : மாநில அரசு

பணி விவரம்
Ø நேர்முகத் தேர்விற்கான பதவிகள்
கல்லூரி நூலகர் - 8
நூலகர் மற்றும் தகவல் அலுவலர் - 1
மாவட்ட நூலக அலுவலர் - 3
Ø நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்
நூலக உதவியாளர் - 2
நூலகர் மற்றும் தகவல் உதவியாளர் நிலை - II - 22
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 36
விண்ணப்பிக்க கடைசி தேதி: 1.3.2023
கல்வி தகுதி
கல்லூரி நூலகர் பணிக்கு நூலக அறிவியல் மற்றும் தகவல் அறிவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
நூலகர் மற்றும் தகவல் அலுவலர், மாவட்ட நூலக அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கு, நூலக அறிவியல் மற்றும் தகவல் அறிவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நூலகர் பணியில் ஐந்தாண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். மாவட்ட நூலக அலுவலர் பணியிடத்திற்கு மூன்றாண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு விண்ணப்பிக்க நூலக அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும்.
ஊதியம்
கல்லூரி நூலகர் - மாதம் ரூ.57,700 முதல் ரூ. 2,11,500 வரை ஊதியமாக வழங்கப்படும்.
நூலகர் மற்றும் தகவல் அலுவலர் (அண்ணா நூற்றாண்டு நூலகம்) - மாதம் ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை ஊதியமாக வழங்கப்படும்.
மாவட்ட நூலக அலுவலர் - மாதம் ரூ.56,100 முதல் ரூ. 2,05,700 வரை ஊதியமாக வழங்கப்படும்.
நூலக உதவியாளர் - மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை ஊதியமாக வழங்கப்படும்.
நூலகர் மற்றும் தகவல் உதவியாளர் நிலை - மாதம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை ஊதியமாக வழங்கப்படும்.
நோட் இட் ப்ளீஸ்....!
Ø அறிவிப்பு நாள்: 31.1.2023
Ø இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 01.03.2023
ஒரு முறை பதிவு/நிரந்தரப்பதிவு
விண்ணப்பதாரர்கள் நிரந்தரப் பதிவு கட்டணமாக ரூ.150 ஐை செலுத்தி, தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப் பதிவில் (OTR) கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
நிரந்தரப் பதிவு முறை பதிவு செய்த நாளிலிருந்து, 5 வருட காலத்திற்கு செல்லத்தக்கதாகும். அதன் பின் உரிய பதிவு கட்டணத்தை செலுத்தி புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
ஒரு நிரந்தரப் பதிவானது, எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது. விண்ணப்பதாரர் தேர்வு எழுத விரும்பும் ஒவ்வொரு தேர்விற்கும், தனித்தனியே இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
நிரந்தரப் பதிவுக்கான பதிவு கட்டண நியமனத்திற்கான விண்ணப்பம் / தேர்வு கட்டணம் அல்ல. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது செலுத்த வேண்டும்.
விண்ணப்பதாரர் தங்களுடைய ஒரு நிரந்தரப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.
தேர்வாணையத்தின் தெரிவுகள் அனைத்தும் விண்ணப்பதாரரின் தர வரிசைப்படியே மேற்கொள்ளப்படுகின்றன.
பொய்யான வாக்குறுதிகளை சொல்லி, தவறான வழியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறும் இடைத்தரகர்களிடம் விண்ணப்பதாரர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்படுகின்றனர்.
இதுபோன்ற தவறான மற்றும் நேர்மையற்றவர்களால் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும் எவ்வித இழப்புக்கும் தேர்வாணையம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது.
இணையவழி விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் அனைத்து தகவல்களுக்கும் விண்ணப்பதாரரே முழுப் பொறுப்பாவார்.
விண்ணப்பதாரர், தேர்விற்கு இணைய வழியில் விண்ணப்பிக்கும்பொழுது, ஏதேனும் தவறு ஏற்படின், தாங்கள் விண்ணப்பித்த இணைய சேவை மையங்களையோ, பொது
சேவை மையங்களையோ குற்றம் சாட்டக்கூடாது.
விண்ணப்பதாரர் பூர்த்தி செய்யப்பட்ட இணைய வழி விண்ணப்பத்தினை இறுதியாக சமர்ப்பிக்கும் முன்னர், நன்கு சரிபார்த்த பின்னரே சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.03.2023
தேர்வு செய்யப்படும் முறை
நேர்முகத் தேர்விற்கான பதவிகள்
இதற்கு எழுத்துத் தேர்வு, கணினி வழி தேர்வு ,நேர்காணல்/ வாய்மொழித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
வயது வரம்பு
பட்டியலின / பழங்குடியின பிரிவினர் உள்ளிட்ட பிரிவினர் மற்றும் ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு உச்ச வயது வரம்பு இல்லை.
நேர்முகத் தேர்வு உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏனையோருக்கு அதிகபட்ச வயது வரம்பு 37 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது.
கல்லூரி நூலகர் பணிக்கு, ஏனையோர் 59 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு அல்லாத பணியிடங்களுக்கு விண்னப்பிக்க ஏனையோர் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு கட்டணம்
Ø பதிவுக் கட்டணம் : ரூ.150/-
Ø நேர்முகத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு - ரூ.200
Ø நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு மட்டும் - ரூ.100
மற்ற பிரிவினருக்கு அரசால் வழங்கப்பட்ட கட்டணம் செலுத்துவதில் இருந்து சலுகை உண்டு. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
மறக்காதீங்க...!
Ø இணையவழி விண்ணப்பத்தை 1.3.2023 அன்று இரவு 11.59 மணி வரை மட்டுமே சமர்ப்பிக்க இயலும், அதன் பின்னர் அச்சேவை நிறுத்தப்படும்.
Ø தகுதி, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு சலுகை, இதர கல்வித் தகுதி போன்ற இன்ன பிற முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட ஆங்கிலம், தமிழ் அறிவிப்புகள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
Ø நிர்ணயிக்கப்பட்ட கல்வி தகுதிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
Ø எனவே, நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதிகளை தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் இருந்தால் விண்ணப்பிக்கும் போதே பதவிவேற்றம் செய்ய வேண்டும்.
க்ளிக் ப்ளீஸ்....! ஆல் தி பெஸ்ட்...!
https://www.tnpsc.gov.in/English/Notification.aspx
https://apply.tnpscexams.in/notification?app_id=UElZMDAwMDAwMQ==


Click it and Unblock the Notifications












