சென்னையில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள உதவியாளர், கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 16 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்
மொத்த காலிப் பணியிடங்கள் : 16
பணி முறை : தற்காலிகம்
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:
புரோபஷனல் அசிஸ்டெண்ட் I : 7
பணிகள் : ஆட்டோமொபைல், இன்ஸ்ட்ருமென்டேசன், கணினி, ஐடி, ஆகிய துறைகளில் காலியிடங்கள்
கல்வித் தகுதி : பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : நாள் ஒன்றுக்கு 736 ரூபாய் ஊதியம்
புரோபஷனல் அசிஸ்டெண்ட் III : 01
கல்வித் தகுதி : டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : நாள் ஒன்றுக்கு 627 ரூபாய் ஊதியம்
கிளார்க் அசிஸ்டெண்ட் : 5
பணிகள் : ஆட்டோமொபைல், இன்ஸ்ட்ருமென்டேஷன், அப்ளைடு சைன்ஸ், ஐடி, ஆபீஸ் டீன்
கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
ஊதியம் : நாள் ஒன்றுக்கு 434 ரூபாய் ஊதியம்
பியூன் (மெக்கானிக்) : 01
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இரண்டாண்டு ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதி : கனரக வாகன ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும்.
ஊதியம் : நாள் ஒன்றுக்கு 412 ரூபாய் ஊதியம்
பியூன் : 4
பணிகள் : ஏரோஸ்பேஸ், ஆட்டோமொபைல், ஐடி, கம்ப்யூட்டர் டெக்னாலாஜி
கல்வித் தகுதி : எட்டாம் வகுப்பு படித்தவர்கள் பியூன் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : நாள் ஒன்றுக்கு 379 ரூபாய் ஊதியம்
லேபரர் : 01
பணிகள் : ஏரோஸ்பேஸ் இன்ஜினிரிங் துறை
கல்வித் தகுதி : எட்டாம் வகுப்புக்குக் குறைவாக படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : நாள் ஒன்றுக்கு ரூ.296 ஊதியம்
விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.annauniv.edu என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று, அதனை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
The Dean,
Madras Institute of Technology Campus,
Anna University, Chromepet,
Chennai - 600 044
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2019 டிசம்பர் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இங்கே இணைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












