அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்...!

அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு https://rcell.annauniv.edu என்ற இணையதள முகவரியைக் காணலாம்.

தமிழகத்தில் மிகவும் பிரபலமாக இருப்பது அண்ணா பல்கலைக்கழகம். மாநிலத்தில் உள்ள அனைத்து தொழில்நுட்பக் கல்லூரிகளையும் இணைத்து சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள மதுரை, கோவை, விழுப்புரம், நாகர்கோவில், துாத்துக்குடி, காஞ்சிபுரம் உட்பட 16 அண்ணா பல்கலைக்கழக இன்ஜினியரிங் கல்லுாரிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) இந்தியாவின், தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. 1978-ம் ஆண்டில், சென்னையில் நிறுவப்பட்ட இந்த பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்கிறது. இதன் முதன்மை வளாகம் சென்னையின் கிண்டியிலும், செயற்கைக்கோள் வளாகம் சென்னையின் குரோம்பேட்டையிலும் அமைந்து உள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்...!

மேலும், நாட்டில் உள்ள தொழி்லநுட்ப பல்கலைக்கழக நிறுவன தரவரிசை கட்டமைப்பானது, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை பத்தாவது இடத்தில் அமர்ந்திருக்கிறது. மேலும் பல்கலை கழகங்களுள் நான்காவது இடத்திலும், பொறியியலில் எட்டாவது இடத்திலும் தரவரிசைப்படுத்திருகிறது. முதன்மை வளாகத்தில் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் மூன்று தொழில்நுட்ப துறைகளும் உள்ளடங்கி உள்ளன. சென்னை தொழில்நுட்ப நிறுவன வளாகம் குரோம்பேட்டையில் அமைந்துள்ளது.

1978-ம் ஆண்டு, செப்டம்பர் 4-ல், சென்னையின் பழம்பெரும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராசு தொழில்நுட்ப கழகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒற்றைப் பல்கலைக்கழகமாக பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.

பின்னர் 1982 -ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்னும் பெயரிலிருந்து 'பேரறிஞர்' மற்றும் 'தொழில்நுட்ப' ஆகிய சொற்கள் நீக்கப்பட்டு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் மாற்றப்பட்டது.

2001-ம் ஆண்டு டிசம்பர் முதல் ஏறக்குறைய தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்ட பின்னர் ஒருங்கிணைந்த அண்ணா பல்கலைக்கழகமாக, அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.

2007-ம் ஆண்டு: நிர்வாக வசதிகளுக்காக ஜனவரி முதல் அண்ணா பல்கலைக்கழகம் 6

ல்கலைக்கழகங்களாகச் செயல்பட்டு வந்தது

அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - கிண்டி வளாகம்

அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - தரமணி வளாகம்

அண்ணா பல்கலைக்கழகம் சென்னை - மண்டல அலுவலகம், திருச்சிராப்பள்ளி

அண்ணா பல்கலைக்கழகம் சென்னை - மண்டல அலுவலகம் திருநெல்வேலி

அண்ணா பல்கலைக்கழகம் சென்னை - மண்டல அலுவலகம் மதுரை

அண்ணா பல்கலைக்கழகம் சென்னை - மண்டல அலுவலகம், கோயம்புத்தூர் என 6 மண்டலங்களாக இருந்தன.

பின்னர் 2007-ம் ஆண்டில் அனைத்து அண்ணா பல்கலைக் கழகங்களையும் ஒருங்கிணைக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒன்றாக மாற்றப்பட்டது.

2012-ம் ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் அனைத்து அண்ணா பல்கலைக்கழகங்கள் மற்றும் வளாகங்களும், அண்ணா பல்கலைகழகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது.
இந்த பெருமை மிகு அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில்தான் பணியிடங்கள் காலியாக அமைந்துள்ளன.

இந்தக் கல்லூரிகளில் தற்போது உதவி பேராசிரியர் பதவியில் ஆட்டோமொபைல் பிரிவில் 4, சிவில் பிரிவில் 30, கம்ப்யூட்டர் பிரிவில் 35, இ.இ.இ. பிரிவில் 25, இ.சி.இ. பிரிவில் 51, மெக்கானிக்கல் பிரிவில் 29, கணிதம் பிரிவில் 17, மேலாண்மை பிரிவில் 11, ஆங்கிலம் பிரிவில் 3, நுாலகர் பிரிவில் 14, உடற்கல்வி பிரிவில் 13 என மொத்தம் 232 காலி இடங்கள் உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு கல்வித்தகுதியாக இன்ஜினியரிங் பிரிவுகளுக்கு பி.இ., / பி.டெக். படிப்பும், அறிவியல் பிரிவுக்கு டிகிரி படிப்பும், நெட், செட் தேர்வு மதிப்பெண்ணும், மேலாண்மை பணிக்கு சி.ஏ., ஐ.சி.டபிள்யு.ஏ. படிப்பும் , நுாலகர் பணிக்கு எம்.எல்.எஸ்.சி. படிப்பும், உடற்கல்வி பணிக்கு விளையாட்டு அறிவியலில் முதுகலை டிகிரி படிப்பும் முடித்திருக்க வேண்டும்.

வயதுத்தகுதியாக: 1.7.2023 அடிப்படையில் 24 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.

எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு என்ற அடிப்படையில் இந்தப் பணியிடங்களுக்கு நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்-லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பக் கட்டணமாக ரூ. 1180 செலுத்த வேண்டும். மேலும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ரூ. 472 மட்டும் செலுத்தினாலே போதும்.

விண்ணப்பங்களை அனுப்ப கடைசிநாள் இம்மாதம் டிசம்பர் 13-ம் தேதியாகும்(13.12.2023 மாலை 5:30 மணி).

மேலும் விவரங்களுக்கு https://rcell.annauniv.edu என்ற இணையதள முகவரியைக் காணலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Anna University invites Online applications for the recruitment of 232 Assistant Professors, Assistant Librarians, Assistant Directors (Physical Education) Posts. This online facility will be available in the Official website https://www.annauniv.edu/ from 29.11.2023 10.00 AM to 13.12.2023 05.30 PM. Before applying for the recruitment, candidates must carefully read the Anna University Teaching Faculty 2023 notification and ensure their eligibility.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+