ஏர் இந்தியா நிறுவனத்தில் இன்ஜினீயர்களுக்கு வேலை இருக்கு...!!!

ஏர் இந்தியா நிறுவனத்தில் கியூஏ ஆட்டோமேஷன் இன்ஜினீயர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கூடுதல் விவரங்களுக்கு https://careers.airindia.com/job/Kochi-QA-Automation-Engineer/20854744/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

ஏர் இந்தியா இந்தியாவின் தேசிய விமானசேவை நிறுவனமாகும். பயணிகள், சரக்கு போக்குவரத்து சேவைகளை வழங்கும் இந்நிறுவனம் மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம், டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றைத் தளமாகக் கொண்டு இயங்குகின்றது. 1932-ல் டாடா ஏர்லைன்ஸ் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் இப்பொழுது உலகின் 146 விமான நிலையங்களுக்கு சேவைகளை மேற்கொண்டு வருகிறது.

ஏர் இந்தியா நிறுவனத்தில் இன்ஜினீயர்களுக்கு வேலை இருக்கு...!!!

ஏர் இந்தியா நிறுவனம் டாடா ஏர் சர்வீசஸ் என்ற பெயரில் முதலில் துவக்கப்பட்டது, பின்னர் டாடா ஏர்லைன்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிறுவனத்தை தொடங்கியவர் ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா (சுருக்கமாக ஜேஆர்டி டாடா).

இவர்தான் முதல் இந்திய வணிக விமான ஓட்டி உரிமம் பெற்றவர் ஆவார். இரண்டு பழைய ஹாவில்லாண்ட் புஷ் மோத்ஸ் விமானங்களை வாங்கி தொழிலில் ஜேஆர்டி டாடா இறங்கினார். 1932 அக்டோபர் 15 அன்று டாடா ஏர்லைன்ஸ், கராச்சியில் இருந்து மும்பைக்கு தனது முதல் பயணத்தை தொடங்கியது. முதலில் சரக்குப் போக்குவரத்துதான் தொடங்கப்பட்டது.

ஒற்றை இன்ஜின் கொண்ட அந்த விமானம், 25 கிலோ கடிதங்களை மும்பைக்கு கொண்டு வந்தது. ஜேஆர்டி டாடாவே அந்த விமானத்தை ஓட்டி வந்தார். அதன்பின்னர் டாடா ஏர்லைன்ஸ் படிப்படியாக வளர்ந்தது. டெல்லி, மும்பை, திருவனந்தபுரம், குவாலியர், போபால், சென்னை என பல நகரங்களுக்கும் தனது சேவையை விரிவுபடுத்தியது.

டாடா ஏர்லைன்ஸ் முதல் வருடத்தில், விமான சேவையில் 155,000 பயணிகள் மற்றும் 9.72 டன்கள் (10.71 டன்) அஞ்சல் சுமைகளை சுமந்து 160,000 மைல்கள் (260,000 கிமீ) பறந்து, 60,000 (அமெரிக்க டாலர்கள் $ 930) லாபம் ஈட்டியது.

இந்த பெருமைமிகு ஏர் இந்தியா நிறுவனத்தில்தான் தற்போது பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாத அறிவிப்பு வந்துள்ளது. கியூ ஆட்டோமேஷன் இன்ஜினீயர். கேபின் சர்வீஸ் டிரைனர் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த ஏர் இந்தியா நிறுவன பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி, கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரியவந்துள்ளது.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

கியூஏ ஆட்டோமேஷன் இன்ஜினீயர் பணியிடம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு

https://careers.airindia.com/job/Kochi-QA-Automation-Engineer/20854744/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

கேபின் சர்வீஸ் டிரைனர் பணியிடம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு

https://careers.airindia.com/job/Gurugram-Cabin-Service-Trainer/20856144/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Air India Limited (Air India) has released a notification at airindia.in for recruitment to the Post of cabin service trainer & Automation Engineers. Interested candidates can Apply Online.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+