மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Alliance Air Aviation Limited நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர், மூத்த மேலாளல், உதவி மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிகளுக்கு ரூ.1.20 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : Alliance Air Aviation Limited
மேலாண்மை : பொதுத்துறை நிறுவனம்
மொத்த காலிப் பணியிடங்கள் : 06
பணி : Alliance Air Aviation Limited நிறுவனத்தில் தற்போது மேலாளர், மூத்த மேலாளர், உதவி பொது மேலாளர், இணை பொது மேலாளர் என மொத்தம் 6 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் டிப்ளமோ, இளநிலைப் பட்டம், முதுநிலைப் பட்டம், CA, ICWA, CS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- மேலாளர் மற்றும் மூத்த மேலாளர் பணிக்கு - 45 வயது
- உதவி மற்றும் இணை பொது மேலாளர் பணிக்கு - 58 வயது
ஊதியம் : ரூ.40,000 முதல் அதிகபட்சம் ரூ.1,20,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 12.11.2021 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் post/ speed post/ courier விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
Alliance Air
Personnel Department
Alliance Bhawan,
Domestic Terminal -1, I.G.I Airport,
New Delhi - 110037
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.airindia.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும்.


Click it and Unblock the Notifications












