AICTE Non Teaching Recruitment 2023: அக்கவுண்டன்ட்க்கு மாதம் ரூ.1.12 லட்சம்..!

ஏ.ஐ.சி.டி.இ., என அழைக்கப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலில், கணக்காளர், மொழிப்பெயர்ப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிக்கான காலிப்பணியிடங்கள் தேர்வுக்கான அறிவிப்பை, தேசிய தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது.

இப்பதவிகளுக்கு தகுதி, ஆர்வமுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி, ஆர்வமுள்ளவர்கள் மே.,15க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

நிர்வாகம்: அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்(AICTE)

மேலாண்மை: மத்திய அரசு

AICTE Non Teaching Recruitment 2023:  அக்கவுண்டன்ட்க்கு மாதம் ரூ.1.12 லட்சம்..!

பதவிகள் விவரம்

Ø Accountant/Office Superintendent cum Accountant

Ø Junior Hindi Translator

Ø Assistant

Ø Data Entry Operator - Grade III

Ø Lower Division Clerk

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.05.2023

பணியிடங்கள் எண்ணிக்கை: 46

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 30 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பதவிக்கு ஏற்றவாறு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும். எனினும் அதிகப்பட்ச வயது வரம்பு 35.

ஊதியம்

Ø Accountant/Office Superintendent cum Accountant - Pay Matrix Level 6 ரூ.35,400- 1,12,400

Ø Junior Hindi Translator - Pay Matrix Level 6 ரூ.35,400- 1,12,400

Ø Assistant - Pay Matrix Level 6 ரூ.35,400- 1,12,400

Ø Data Entry Operator - Grade III - Pay Matrix Level 2 ரூ,19,900- 63,200

Ø Lower Division Clerk - Pay Matrix Level 2 ரூ.19,900- 63,200

என்ற முறையில், மாத ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கல்வி தகுதி

கணக்காளர் மற்றும் அலுவலக மேற்பார்வையாளர் பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆடிட்டிங் உள்ளிட்ட பணிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இந்தியின் இளங்கலை பட்டம் பெற்றவர்களும், இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்தியில் இருந்து ஆங்கில மொழியில் மொழிபெயர்ப்பதில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவியாளர் பணிக்கு ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும்.

பொது மேலாண்மை / அக்கவுண்ட்ஸ் பணியில் ஆறு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

Data Entry Operator - Grade III பணிக்கு, இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கம்யூட்டர் அப்ளிகேஷனில் டிப்ளமோ படிப்பு பெற்றிருக்க வேண்டும்.

Lower Division Clerk பணிக்கு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு பதவிக்கு ஏற்றவாறு பணி அனுபவம், கல்வி தகுதி விபரங்கள் விரிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

விண்ணப்ப கட்டணம்

· பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.1000 மற்றும் பட்டியலின / பழங்குடியின பிரிவினர், பெண்கள் ஆகியோர் ரூ.600 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

ப்ளீஸ் நோட் இட்...!

ஆன்லைன் வாயிலாக விண்ணப்பத்தை, 15.05.2023 அன்று இரவு 11.59 மணிக்குள் விண்ணப்பிக்க இயலும். பின்னர், அச்சேவை நிறுத்தப்படும்.

எழுத்து, திறனறிவு தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தமிழகத்தில், சென்னையில் ஆன்லைன் எழுத்து தேர்வு மையம் அமைக்கப்பட உள்ளது. தேர்வு மையம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழு விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இணையதளத்தை பார்வையிடவும்.

விண்ணப்பங்களை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

வயது, கல்வித் தகுதி, பிரிவு போன்றவற்றில் உரிமை கோருபவர்கள், அதற்குரிய ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் https://recruitment.nta.nic.in/AICTERecruitment/Page/Page?PageId=1&LangId= ஆகிய தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களின் புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்து கொள்ளுங்கள்.

மேலும், தங்கள் கல்வி மற்றும் பிற சான்றிதழ்களை கையில் வைத்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும்.

ஒரு முறை கிளிக் பண்ணுங்க ப்ளீஸ்...!

https://recruitment.nta.nic.in/AICTERecruitment/Page/Page?PageId=1&LangId=P

https://recruitment.nta.nic.in/AICTERecruitment/File/ViewFile?FileId=1&LangId=P

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AICTE Accountant Notification 2023: All India Council of Technical Education, also known as AICTE, has announced that eligible and interested persons can apply for various vacant posts.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+