மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தில் (AICEng) காலியாக உள்ள Management Trainee மற்றும் Hindi Officer பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 31 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.65 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் (AIC)
மேலாண்மை : மத்திய அரசு
பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :
- Management Trainee - 30
- Hindi Officer - 01
மொத்த காலிப் பணியிடங்கள் : 31
கல்வித் தகுதி :
Management Trainee - Agriculture Sciences, Information Technology, Legal, Accounts, B. Sc. (Agriculture), BE, B.Tech, Graduate in Law, B.Com, Chartered accountants துறைகளில் ஏதேனும் ஒன்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Hindi Officer - இந்தி படிப்பில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
- விண்ணப்பதாரர் 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் :
- Management Trainee - ரூ.40,000 முதல் ரூ.42,000 மாதம்
- Hindi Officer - ரூ.65,000 மாதம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.aicofindia.com எனும் இணையதளத்தின் மூலம் 13.12.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 13.12.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.1000
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ.200
தேர்வு முறை :
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.aicofindia.com/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள முகவரியைக் காணவும்.


Click it and Unblock the Notifications












