தமிழக அரசின் ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இவற்றிற்கான அறிவிப்பு ஆவின் நிறுவனத்தில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் கீழ்க்கண்ட தகவல்களை தெரிந்துகொண்டு விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு - சேலம்
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடம் : 15
பணி மற்றும் பணியிட விபரம்:-
- தொழில்நுட்பவியலாளர் : 09
- நிர்வாகி : 04
- மேலாளர் : 02
கல்வித் தகுதி :-
- தொழில்நுட்பவியலாளர் : 10-வது தேர்ச்சி, ஐடிஐ, டிப்ளமோ
- நிர்வாகி : பி.காம், பி.ஏ
- மேலாளர் : இளங்கலை கால்நடை அறிவியல், பட்டய கணக்காளர் (சிஏ)
வயதுவரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் :
- தொழில்நுட்பவியலாளர் : ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்
- நிர்வாகி : ரூ.20,600 முதல் ரூ.65,500 வரையில்
- மேலாளர் :-
- கணக்கு மேலாளர் : ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரையில்
- கால்நடை மேலாளர் : ரூ.55,500 முதல் ரூ.1,75,700 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : http://www.aavinmilk.com என்னும் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
The General Manager,
The Salem District Co-operative Milk Producers Union Ltd
Sithanur, Thalavaipatty, Salem - 636302.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :-
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் : ரூ. 250
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 2018 டிசம்பர் 20 தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.aavinmilk.com/hrslm011218.html என்னும் லிங்க்கையும், விண்ணப்பப் படிவத்தினைப் பெற http://www.aavinmilk.com/hrslmapp011218.pdf என்னும் லிங்க்கையும் கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












