8-வது தேர்ச்சியா? ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (ஆவின்) காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.19 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 8-வது தேர்ச்சி பெற்று ஓட்டுநர் பணி அனுபவம் உள்ளவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

8-வது தேர்ச்சியா? ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!

 

நிர்வாகம் : காஞ்சிபுரம், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (Aavin)

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 02

பணி : ஓட்டுநர்

பணியிடம் : காஞ்சிபுரம், திருவள்ளூர்

கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி பெற்று ஓட்டுநர் பணி அனுபவம் உள்ளவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • 30 முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : மாதம் ரூ.19,500

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.aavinmilk.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 27.11.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The General Manager, K.T.D.C.M.P.Union Ltd., 55, Guruvappa Street, Ayanavaram, Chennai - 600 023

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 27.11.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்களில் எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.250
  • எஸ்சி, எஸ்டி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.100

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://aavinmilk.com/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AAVIN Recruitment 2020: Application invited for Drivers (L.V.D) Post at Kancheepuram
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X