தமிழக அரசிற்கு உட்பட்டு காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் (ஆவின்) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கான தகுதியும், விருப்பமும் உடையோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம் : கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் (ஆவின்), காஞ்சிபுரம்
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடம் : 11
பணி மற்றும் காலிப் பணியிடம்:-
- மூத்த தொழிற்சாலை உதவியாளர் : 04
- துணை மேலாளர் : 05
- மேலாளர் : 02
கல்வித் தகுதி :-
மூத்த தொழிற்சாலை உதவியாளர் : 12-வது தேர்ச்சி மற்றும் ஐடிஐ
துணை மேலாளர் : சிவில் இன்ஜினியரிங், கணினி அறிவியல் துறையில் பி.இ, தகவல் தொழில்நுட்பம், உணவு தொழில்நுட்பத் துறையில் பி.டெக்
மேலாளர் : எம்பிஏ, கால்நடை மருத்துவத் துறையில் இளங்கலைப் பட்டம்
வயது வரம்பு :
மூத்த தொழிற்சாலை உதவியாளர் : 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
துணை மேலாளர் : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
மேலாளர் : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம்:-
மூத்த தொழிற்சாலை உதவியாளர் : ரூ.15,700
துணை மேலாளர் : ரூ. 35,900
மேலாளர் : ரூ. 37700 முதல் ரூ. 55,500 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://www.aavinmilk.com/hrkt050219.html
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.aavinmilk.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The General Manager, Kancheepuram-Thiruvallur District Co-operative Milk Producers' Union Ltd., No.55, Guruvappa Street, Ayanavaram, Chennai - 600 023.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 20.02.2019 தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:-
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் : ரூ. 250
- பிற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவதினைப் பெறவும் http://www.aavinmilk.com/hrkt050219.html அல்லது www.aavinmilk.com என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












