சிறப்பான வேலைவாய்ப்பு..!! இந்திய விமான நிலைய ஆணையம் அழைக்கிறது..!!!

ஏர்போர்ட் அதாரிட்டி ஆப் இந்தியா (ஏ.ஏ.ஐ) நிறுவனத்தில் காலியாக பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். கூடுதல் தகவல்களுக்கு https://www.aai.aero/en என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

இந்திய விமான நிலையங்களின் ஆணையம் (Airports Authority of India, AAI) இந்தியாவில் உள்ள குடியியல் விமான நிலையங்களையும் ஏடிசி, சிஎன்எஸ் போன்ற வழிகாட்டு வசதிகளையும் இயக்குகின்ற பொறுப்புடைய மத்திய அரசு நிறுவனமாகும்.

இந்த அமைப்பு நாட்டிலுள்ள 125 விமான நிலையங்களை இயக்குகிறது; இவற்றில் 11 சர்வதேச விமான நிலையங்களும் 8 சுங்கச்சாவடி உள்ள விமான நிலையங்களும் 81 உள்ளூர் விமான நிலையங்களும் பாதுகாப்பு துறை வளாகங்களில் அமைந்துள்ள 25 விமான நிலையங்களும் அடக்கமாகும்.

இந்திய வான்வெளி முழுமையாகவும் அடுத்துள்ள பெருங்கடல் பகுதிகளிலும் இது வான்வழி போக்குவரத்து மேலாண்மை சேவைகளை வழங்கி வருகிறது. பாதுகாப்பான வான் வழிப் பயணத்துக்காக தன் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் 25 மற்ற இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள நிலத்தில் அமைந்த கட்டமைப்பையும் நிர்வாகம் செய்து வருகிறது.இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் சிறு நவரத்தின மதிப்பைப் பெற்ற நிறுவனமாக ஏஏஐ அமைந்துள்ளது.

சிறப்பான வேலைவாய்ப்பு..!! இந்திய விமான நிலைய ஆணையம் அழைக்கிறது..!!!

இந்த சிறப்புவாய்ந்த ஏர்போர்ட் அதாரிட்டி ஆப் இந்தியா (ஏ.ஏ.ஐ) நிறுவனத்தில்தான் தற்போது பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
தற்போது இங்கு ஜூனியர் அசிஸ்டென்ட் பிரிவில் பயர் சர்வீஸ் 73, ஆபீஸ் 2, எலக்ட்ரானிக்ஸ் 25, அக்கவுன்ட்ஸ் 19 என மொத்தம் 119 இடங்கள் காலியாக உள்ளன.

இந்திய விமான நிலைய ஆணைய பணியிடங்களுக்கான கல்வித்தகுதி:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க பயர் சர்வீஸ், எலக்ட்ரானிக்ஸ் பணிக்கு டிப்ளமோ, ஆபீஸ் பணிக்கு டிகிரி, அக்கவுன்ட்ஸ் பணிக்கு பி.காம். பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

இந்திய விமான நிலைய ஆணைய பணியிடங்களுக்கான வயதுத்தகுதி: 20.12.2023 அடிப்படையில் 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய விமான நிலைய ஆணைய பணியிடங்களுக்கான தேர்ச்சி முறை:

இந்திய விமான நிலைய ஆணைய பணியிடங்களில் சேர்வதற்கு எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்

தேர்வு மையம்:

இந்திய விமான நிலைய ஆணைய பணியிடங்களுக்குத் தேர்வு மையங்களாக சென்னை, மதுரை நகரங்கள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இந்திய விமானநிலைய ஆணைய பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பக்கட்டணம்:

இந்திய விமான நிலைய ஆணைய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணமாக ரூ. 1000 செலுத்த வேண்டும்.

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (ஏஏஐ) ஓராண்டு அப்ரென்டிஸ் பயிற்சி மேற்கொண்டவர்கள், மகளிர், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

கடைசி நாள்:

இந்திய விமான நிலைய ஆணைய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் ஜனவரி 26-ம் தேதி (26.1.2024) கடைசி நாளாகும்.

இணையதள முகவரி:

கூடுதல் தகவல்களுக்கு https://www.aai.aero/en என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Airports Authority of India (AAI), a Government of India Public Sector Enterprise has invited online application for Jr Assistant & Sr Assistant positions on its official website. A total of 119 posts are to be filled through the recruitment drive out of which 73 are for Junior Assistant (Fire Service), 25 for Senior Assistant (Electronics) and 19 for Senior Assistant. The application process for recruitment to the above positions starts on December 27 on the official website, and the last date to submit the online application form is January 26, 2024.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+