டெல்லி: மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் குடிமைப் பணிக்கான முதன்மைத் தேர்வுகள் ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெறவுள்ளன.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற குடிமைப் பணிக்கான தேர்வுகளை மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்த பணிகளுக்கான முதன்மைத் தேர்வுகள் ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்காக மே 27-ம் தேதி வரை மாணவர்கள் இந்தத் தேர்வுகளுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கூடுதல் தகவல்கள் www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்தத் தேர்வுகள் 2 தாள்களைக் கொண்டதாக இருக்கும். 400 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். 2 தாள்களும் தலா 2 மணி நேரத்தில் எழுவதாக இருக்கும்.
முதன்மைத் தேர்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் பிரதானத் தேர்வுக்கும் அதன் பிறகு நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கும் அழைக்கப்படுவர்.
தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மே 27 ஆகும். முதன்மைத் தேர்வுகள் ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெறும். பிரதானத் தேர்வுகள் டிசம்பர் 3-ம் தேதி நடைபெறும்.


Click it and Unblock the Notifications

