தேசிய தேர்வு முகமை சார்பில் 2018 யுஜிசி நெட் தேர்விற்கான அனுமதிச் சீட்டு இன்று (நவம்பர் 20) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய தேர்வு முகமையின் முதல் நெட் தேர்வு 2018 டிசம்பர் 9-ம் தேதியன்று துவங்கி பல்வேறு கட்டங்களாக நடைபெறவுள்ளது. அதுவும் முதன்முறையாக இணையத்திலேயே. இத்தேர்விற்குத் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப் பாடங்கள், பொருளாதாரம், வணிகவியல், வரலாறு, சமூகவியல், அரசியல் அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
அனுமதிச் சீட்டு பெற:-
1. யுஜிசி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான ntanet.nic.in லிங்க்கிற்கு செல்ல வேண்டும்.
2. அதனுள் download admit card என்னும் பக்கத்தினை தேர்வு செய்ய வேண்டும்.
3. அங்கே தங்களுடைய பதிவெண் மற்றும் எண் மற்றும் அதற்கான கடவுச்சொல்லைப் பதிய வேண்டும்.
4. பின் உங்களுடைய தேர்வு அனுமதிச்சீட்டு வெளியாகும். அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
யுஜிசி நெட் 2018 முக்கிய தேதிகள்:-
- தேர்வு அனுமதிச்சீட்டு - 2018 நவம்பர் 20
- தேர்வு தேதி - 2018 டிசம்பர் 9 முதல் 23 வரை
- தேர்வு முடிவு வெளியீடு - 2019 ஜனவரி 10


Click it and Unblock the Notifications












