ஆசிரியர் தகுதித் தேர்விற்கான உத்தேச விடைகள் வெளியீடு!

ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கான உத்தேச விடைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

By Saba

ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கான உத்தேச விடைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தற்காலிக விடைக் குறிப்பின் மீது தேர்வர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அதனை தெரிவிக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்விற்கான உத்தேச விடைகள் வெளியீடு!

தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுகள் (டெட்) (தாள் 1, தாள் 2) கடந்த ஜூன் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இதில், 5.88 லட்சம் பேர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, தேர்வுகளுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக விடைக் குறிப்புகள் பாட வல்லுநர்களால் தயாரிக்கப்பட்டு www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளன.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள இந்த தற்காலிக விடைக் குறிப்பின் மீது ஏதேனும் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் வரும் ஜூலை 15-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் மையத்தில் உள்ள பெட்டியிலோ அல்லது ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பெறும் வகையில் அஞ்சல் மூலமாகவோ ஒவ்வொரு விடைக்கும் தனித்தனியாக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள உரிய படிவத்தில் ஆதாரங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும்.

குறிப்பாக, அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்கள், மேற்கோள் புத்தகங்களில் உள்ள ஆதாரங்களை மட்டுமே அளிக்க வேண்டும். கையேடுகள் மற்றும் தொலைதூர கல்வி நிறுவன ஆதாரங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNTET Answer Key 2019 released on trb.tn.nic.in, download link & details here
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+