ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெறவுள்ள வட்டார கல்வி அலுவலர் பணிக்கு ஏற்கனவே உத்தேசமான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சிறு மாற்றம் செய்யப்பட்டு புதிய தேர்வு தேதி வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வட்டார கல்வி அலுவலர் (Block Educational Officer Exam) தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், எண்.13/2019 நாள் : 27.01.2019 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி இணையவழி தேர்விற்கான உத்தேச தேதி 15.02.2020 மற்றும் 16.02.2020 என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 14.02.2020, 15.02.2020 மற்றும் 16.02.2020 ஆகிய மூன்று நாட்களில் மேற்குறிப்பிட்ட பணிக்கான தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போதைய நடைமுறையின் படியும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் எடுக்கப்பட்ட முடிவின்படியும் தேர்வர்களுக்கு தேர்வு எழுதும் மாவட்டம் Random முறையில் ஒதுக்கீடு செய்து 10 நாட்கள் முன்பும், தேர்வு எழுதும் மையம் 3 நாட்கள் முன்பும் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












