அண்ணா பல்கலைக் கழகத்தின் சார்பில் எம்.பிஏ, எம்.சிஏ, எம்.டெக் உள்ளிட்ட படிப்புகளுக்கான TANCET தேர்விற்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

பி.எஸ்.சி, பி.இ முடித்தவர்கள் அடுத்ததாக எம்பிஏ, எம்சிஏ, எம்டெக், எம்.ஆர்க், எம்.பிளான் உள்ளிட்ட மேற்படிப்புகளில் சேர அண்ணா பல்கலைக் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் Tamil Nadu Common Entrance Test (TANCET) என்னும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தற்போது, 2020-21 ஆம் கல்வியாண்டிற்கான டான்செட் நுழைவுத் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்க விரும்புவோர் https://tamil.careerindia.com/tancet/ என்னும் இணையதளத்தின் மூலம் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த TANCET தேர்வானது ஒவ்வொரு பாடப் பிரிவுகளுக்கும் தனித்தனியாக நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், விண்ணப்பித்தவர்களுக்கு பிப்ரவரி 13ம் தேதியன்று தேர்வு நுழைவுச் சீட்டு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TANCET 2020 தேர்விற்கு நேரடியாக விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.
TANCET 2020 தேர்வு நாட்கள்:-
- எம்சிஏ படிப்பிற்கான TANCET தேர்வு நடைபெறும் நாள் : 29 பிப்ரவரி 2020. நேரம் - காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையில்
- எம்பிஏ படிப்பிற்கான TANCET தேர்வு நடைபெறும் நாள் : 29 பிப்ரவரி 2020. நேரம் - பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையில்
- M.E, M.Tech, M.Arch, M.Plan உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வு நடைபெறும் நாள் : 1 மார்ச் 2020. நேரம் - காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையில்


Click it and Unblock the Notifications












