நாளை வெளியாகிறது பிளஸ் 1 தேர்வு முடிவுகள்....மகிழ்ச்சியில் மாணவச் செல்வங்கள்...!!

பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 14-ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுவதாக தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது. இதனால் பிளஸ்-1 மாணவச் செல்வங்கள் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்துள்ளனர். மாணவர்கள் தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய இணையதளங்களைத் தொடர்புகொண்டு அறியலாம்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு சிறப்பான முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 6-ம் தேதி பிளஸ் 2 முடிவுகளும், 10-ம் தேதி 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாயின.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பிளஸ் 1 பொதுத் தேர்வு மாநிலம் முழுவதும் 3,302 மையங்களில் கடந்த மார்ச் 4 முதல் 25-ம் தேதி வரை நடந்தது.

தேர்வு எழுத 8 லட்சத்து 20,187 பள்ளி மாணவர்கள், 4,945 தனித் தேர்வர்கள் என மொத்தம் 8.25 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 8.16 லட்சம் பேர் தேர்வை எழுதியுள்ளனர்.

நாளை வெளியாகிறது பிளஸ் 1 தேர்வு முடிவுகள்....மகிழ்ச்சியில் மாணவச் செல்வங்கள்...!!

இதையடுத்து, மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி 83 முகாம்களில் ஏப்ரல் 6-ல் தொடங்கி 25-ம் தேதியுடன் மிகச் சிறப்பாக முடிவடைந்தது. இதற்கு அடுத்தபடியாக இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிகளும் முடிவடைந்தன.

இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகளை தேர்வுத் துறை மே 14-ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடுகிறது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் nwww.tnresults.nic.i மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும் அறியலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் (என்ஐசி) மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் (எஸ்எம்எஸ்) தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மாணவர்களின் தங்கள் மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in எனும் தளத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான முன்னேற்பாடுகளை பள்ளி நிர்வாகங்கள் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு தமிழக தேர்வுத் துறை இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil Nadu Higher Secondary Certificate Results 2024 (HSE +1) will be released on 14 May 2024 on the official website at 9:00 am in 2024. Students will be able to check their result with their registration number and ID password. Download your score card from the given official link. Students who appeared for the exams can check their results at the official website — tnresults.nic.in or dge.tn.gov.in.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+